• TRENDING | பர பர

தனது மூளை அறுவை சிகிச்சைக்கு பணம் திரட்ட, எலுமிச்சைச் சாறு விற்ற 7 வயது சிறுமி!





தனது மூளை அறுவை சிகிச்சைக்கு பணம் தேவைப்பட்டதால், 7 வயதான சிறுமி ஒருவர், எலுமிச்சைச் சாறு விற்ற சம்பவம் அனைவரையும் மனமுருக வைத்துள்ளது.

அமெரிக்காவின், அலபாமாவைச் சேர்ந்தவர் லிசா ஸ்காட் என்ற 7 வயது சிறுமி. இவருக்கு பெருமூளையில் மூளைச் சிதைவு ஏற்பட்டது. இதனால் லிசாவுக்கு ஆபரேஷன் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இதற்காக கிட்டத்தட்ட 4 லட்சம் டாலர் வரையிலும் தேவைப்பட்டது. இந்தக் குழந்தையின் தாய் எலிசபெத் ஸ்காட் மூலம், லிசாவின் கதையைக் கேள்விப்பட்ட பலரும், நன்கொடைகள் மூலமாகவும், ஆன்லைனில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு தனி நிதி திரட்டுதல் மூலமாகவும் தங்களால் முடிந்த பண உதவிகளை அளித்தனர்.

இந்நிலையில், மிகவும் சுறுசுறுப்பும், உத்வேகமும் உள்ள லிசா ஸ்காட் தனது மூளை அறுவை சிகிச்சைக்காக ஒரு பேக்கரியில் எலுமிச்சைச் சாறு விற்று அதன் மூலம் பணத்தை திரட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் ஆபரேஷனுக்குத் தேவையான பணமும் ஓரளவுக்கு வந்து சேர, தற்போது ஆபரேஷனுக்கான முதற்கட்ட நடைமுறைகள், பாஸ்டன் குழந்தைகள் மருத்துவமனையில் நடந்து முடிந்துள்ளதாக அவரது தாய் எலிசபெத் ஸ்காட் தெரிவித்துள்ளார்.

தனது ஆபரேஷனுக்காக, தானே பணம் திரட்ட இந்தச் சிறுமி செய்த செயல், பார்ப்போரை மனமுருகச் செய்துள்ளது.




Comments

கேஆர்எஸ் சம்பத் says :

நலம் பெற வாழ்த்துக்கள் லிசா ஸ்காட் !!

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :