• TRENDING | பர பர

‘மிருகா’: சஸ்பென்ஸ் திரில்லர் படவிமர்சனம்!


- ராகவ் குமார்





நாம் அன்றாடம் செய்தித்தாள்களில் படிக்கும் ஒரு செய்திதான்.. ஒரு ஆண் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொள்வது, அப்பெண்னின் சொத்தை அபகரிக்க முயற்சிப்பது போன்ற விஷயங்களை வைத்து சுவாரசியமான கதை உருவாக்கி, சஸ்பென்ஸ் திரில்லர் என்ற நூலில் கோர்த்து மிருகா என்ற பெயரில் அழகாக தந்துள்ளார் பிரபல ஒளிப்பதிவாளர் பன்னீர் செல்வம். படத்தின் இயக்கம் J. பார்த்திபன்.

ஒரு நபர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் குழந்தையுடன் இருக்கும் கைம்பெண்களுக்கு காதல் வலை விரித்து ஏமாற்றி திருமணம் செய்து கொள்கிறார். சில மாதங்களில் அந்த குடும்ப நபர்களை கொலை செய்து விட்டு, பணத்துடன் வேறு நகரத்திற்கு சென்று வேறு கைப்பெண்களுக்கு வலை விரிக்கிறார். போலீஸ் துப்பு கிடைக்காமல் திணறுகிறது.

இந்த மோசடி நபர் கணவனை இழந்து குழந்தையுடன் ஊட்டியில் வசிக்கும் டீ எஸ்டேட் கோடீஸ்வரி ராய் லக்ஷ்மியை ஏமாற்றி திருமணம் செய்து கொள்கிறார்.

ஒரு கட்டத்தில் லட்சுமியின் பர்சனல் காரியதரிசி பெண்ணுக்கு உண்மை தெரிந்து விடுகிறது. அவந்தான் தொடர் கொலைகாரன் என்பதை கண்டு பிடித்து விடுகிறார். உடனே அந்த மோசடி கொலைகாரன் அந்த பெண்னை கொலை செய்து விடுகிறார். பின்னர் ராய் லட்சுமியின் குடும்பத்தையும் கொலை செய்ய திட்ட மிடுகிறார். இவரின் எண்ணம் நிறைவு பெற்றதா லட்சுமி இந்த நபரிடம் இருந்து தப்பித்தாரா என்பது பரபரப்பான சஸ்பென்ஸ்.

தமிழ் படங்களில் குறியீடுகளை பயன்படுத்துவது குறைவு. இந்த படத்தில் புலியை ஒரு குறியீடாக பயன்படுத்தி உள்ளார் கதாசிரியர். எந்த ஒரு மிக பெரிய கொலைகார கிரிமினல் ஆனாலும் எதாவது ஒரு தடயம் விட்டு செல்வான் என்பது விதி. இப்படத்தில் காசோலை தடயமாக மாறுகிறது. நாம் பார்க்காத புது கோணத்தில் நடிகர் ஸ்ரீகாந்த்தை இந்த படத்தில் பார்க்கலாம். ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பு. இவரின் கதாபாத்திரம்?! சஸ்பென்ஸ்!

ராய் லட்சுமி. அம்மணி நடிப்பில் வேற லெவெல்! கிளைமாக்ஸ் காட்சியில் கணவன் இறக்கும் போது கண்களில் கோபம், அழுகை, ஏமாற்றம் என அனைத்து உணர்வுகளையும் ஓரே ஷாட்டில் காட்டி இருக்கிறார். வெல்டன் லட்சுமி.

இது வரை ஊட்டியை அழகாகவே பார்த்து பழகி விட்டோம். இப்படத்தின் கேமரா, திகில் ஊட்டி எப்படி இருக்கும் என காட்டுகிறது.

கிளைமாக்ஸ் மட்டும் சற்று நீளம் குறித்திருக்கலாம். ’’புலியாரே..சீக்கரம் யாரையாவது போட்டு தள்ளுங்க’’ என்று நாம் கேட்கும் படி உள்ளது. மிருகா -மனித மிருகங்கள் செய்யும் வக்கிரம்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :