• TRENDING | பர பர

பறக்கும் கப்பலா? இணையத்தைக் கலக்கிவரும் புகைப்படம்!





கப்பல் ஒன்று தண்ணீரில் மிதக்கிறதா அல்லது வானத்தில் பறக்கிறதா.. என்று பார்ப்போரை ஆச்சரியப்படுத்தி குழப்பும் வகையில் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்திய இப்படிப்பட்ட ஒரு வைரல் புகைப்படத்தை, ஸ்காட்லாந்தைச் சேர்ந்த காலின் மெக்கல்லம் என்பவர் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படமானது, கடலின் வெகுதூரத்திலிருந்து கிளிக் செய்யப்பட்டுள்ளது. அதனால், அந்த கப்பல் தண்ணீரில் மிதக்காமல் ஆகாயத்தில் மிதப்பது போல காட்சியளிக்கிறது!

பொதுவாக, வெயில் காலங்களில், சாலையில் பயணிக்கும்போது, ரோடானது ஆங்காங்கே நீர் தேங்கியிருப்பதுபோன்ற ஒரு optical illusion போன்று நம் கண்களுக்குத் தெரியும். அதுபோல்தான், கடலில் நிற்கும் கப்பலின் அடிப்பாகம் வரை மேகமானது சூழ்ந்துகொண்டு இருக்க, கப்பலின் மேல்பாகம் பறப்பது போல காட்சி அளித்தது. இந்தப்படத்தை நன்கு உற்றுப்பார்த்தால், மேகக்கூட்டங்களானது கப்பலை மறைத்துள்ளது நன்கு தெரியும். எதேச்சையாக கப்பலைப் பார்த்தால் மட்டுமே கப்பல் காற்றில் மிதப்பது போல தோன்றும்.

இந்தமாதிரி ஒரு தோற்றத்தை, புகைப்படத்தில் கண்டதும், நெட்டிசன்கள் பலரும் அவர்களது கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒரு சிலரோ, இதை என்னால் நம்பமுடியவில்லை. இது எப்படி சாத்தியமாகும் என கேட்டுள்ளனர்.

இன்னும் சிலரோ, இந்த புகைப்படத்தை யாரோ கிராபிக்ஸ் செய்து இவ்வாறு மாற்றியுள்ளார் என்று கூறியுள்ளனர். ஆனால் இந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மை உணர்ந்த ஒரு சில யூசர்கள் இந்த புகைப்படத்தை எடுத்தவரை பாராட்டி உள்ளனர்.

வானிலை மாற்றம் காரணமாகவோ அல்லது குறிப்பிட்ட இடத்தில் கப்பல் செல்லும்போதோ இதுபோன்ற இயற்கை அதிசயங்கள் நடைபெற வாய்ப்புண்டு. அந்த வகையில் இந்த அதிசயமான புகைப்படம் க்ளிக் ஆகவும் வாய்ப்புள்ளது. இருந்தாலும் இந்தப் புகைப்படம் பலவிதமான குழப்பத்தை ஏற்படுத்தி வைரலாகி வருவது என்னவோ உண்மைதான்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :