• TRENDING | பர பர

அடியாத்தி…வானத்திலிருந்து குதிச்சா, பாராசூட் விரியலையே?! கடைசில என்ன ஆச்சு?! வைரல் வீடியோ!





வானில் பறந்த ஸ்கை டைவிங் வீரரின் பாராசூட் ஓப்பன் ஆகாததால் தவித்த அந்த நபரின் வீடியோ காட்சி ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.

உலகம் முழுவதும் சாகச விளையாட்டு விரும்புபவர்களுக்குப் பிடித்தமானது - ஸ்கை டைவிங் விளையாட்டு! வெளிநாடுகளில் பல இடங்களில் இது மிகவும் பிரபலம். ஸ்கை டைவிங்கில் ஈடுபட வேண்டுமென்றால், இதற்கென்று பிரத்யேக பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே, இதுபோன்ற விளையாட்டுகளில் ஈடுபட முடியும். ஆனால், இப்போது, பலரும் நன்கு பயிற்சிபெற்ற ஒருவரின் உதவியுடன் ஸ்கை டைவிங் செய்து வருகிறார்கள்.

அந்தவகையில் அதுசம்பந்தமான வீடியோ ஒன்றில், ஸ்கை டைவிங் செய்ய ஆசைப்பட்ட ஈரானைச் சேர்ந்த ஒரு இளைஞர் உயரமான இடத்தில் இருந்து கீழே குதிக்கிறார். கீழே அவர் குதித்ததும், காற்றின் வேகமும் அவரை சுழற்றி அடிப்பதால், அவரால் பாராசூட்டை திறக்க முடியாமல் உயிருக்குப் போராடுகிறார்.

அந்த சமயம், உயிர் பயத்தில், அவரது இதயம் ‘திக்...திக்…’கென வேகமாக அடித்துக்கொண்டிருக்க, என்ன நடக்குமோ என்ற படபடப்பு நமக்கும் தொற்றிக்கொள்கிறது. அந்த வேளையில், ஆபத்பாந்தவனாக வந்து அந்த இளைஞரை காப்பாற்றுகிறார் ஸ்கை டைவிங் பயிற்சியாளர் ஒருவர்.

அந்த இளைஞருக்கு அருகே பறந்துகொண்டிருந்த அந்த பயிற்சியாளர், உடனே இளைஞரின் பாராசூட்டை திறந்துவிட, அவரும் சகஜ நிலைக்குத் திரும்பி உயிர் தப்புகிறார்.

இது சம்பந்தமான வீடியோதான், தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

Youtube link : : https://www.youtube.com/watch?v=uglLlt2w1Fg

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :