• TRENDING | பர பர

3 வயதில் சமைக்கும் சிறுவன்: வியக்க வைக்கும் வைரல் வீடியோ!





நியூயார்க்கைச் சேர்ந்த 3 வயதான சிறுவன் ஒருவன் இந்த பிஞ்சு வயதிலேயே சமையல் செய்து வெளியிடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், கிரேட் நெக் என்னும் ஊரில் வசிப்பவர் இல்லிரியன் என்ற இந்த 3 வயது சூப்பர் செஃப்! தன் அம்மா சமைப்பதைப் பார்த்துவிட்டு, தானும் தாயுடன் இணைந்து விதவிதமான உணவுகளைச் சமைத்து வருகிறான்.

இல்லிரியன் ஸ்பெஷாலிடி - வறுத்த கோழி, உருளைக்கிழங்கு ஆம்லெட் உள்ளிட்ட சூப்பர் ஐட்டங்கள்! இன்னும் பல டேஸ்ட்டியான உணவு வகைகளை தயாரித்து, பார்ப்பவர்களை சப்புகொட்ட வைக்கிறான்.

சமைப்பதோடு மட்டுமல்லாமல், அவற்றை வீடியோவாக எடுத்து தனது செஃப் இல்லிரியன் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் போஸ்ட் செய்து வருகிறான். லட்சக்கணக்கானவர்கள் இவனது வீடியோவைப் பார்வையிட்டுள்ளனர்.

Instagram Link : : https://www.instagram.com/p/CLr2Aq7ltDE/

Comments

கேஆர்எஸ் சம்பத் says :

சமைக்கத் தெரியாத ஆண்களுக்கு முன்மாதிரி . சமையல் கட்டுக்குள் நுழையாத பெண்களுக்குப் பாடம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :