• TRENDING | பர பர

பிரதமர் மோடியின் தாய் பற்றி அவதூறுப் பேச்சு! ட்விட்டரில் டிரெண்டாகும் #BoycottBBC





பிரதமர் மோடியின் தாயார் குறித்து, பிபிசி ரேடியோவின் விவாத நிகழ்ச்சி ஒன்றில் ஒருவர் தரக்குறைவாக பேசியதைத் தொடர்ந்து Boycott BBC என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.

`பிக் டிபேட்` என்ற விவாத நிகழ்ச்சி, பிபிசி ரேடியா சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த நிகழ்ச்சியில், சமீபத்தில் நடந்த விவாதம் ஒன்றில் பிரிட்டனில் இந்தியர்களும் சீக்கியர்களும் சந்திக்கும் இன ரீதியிலான பாகுபாடு பற்றி விவாதிக்கப்பட்டது. அவர் அப்படியே டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் குறித்தும் விவாதிக்க தொடங்கினர். அப்போது திடீரென்று கோபமான சைமன், மோடியின் தாயாருக்கு எதிரான அவதூறுக் கருத்துக்களை முன்வைக்க, சுதாகரித்த நெறியாளர் மீண்டும் இன பாகுபாடு குறித்துப் பேசச் சொன்னார். ஆனால், சைமன் தெரிவித்த கருத்தை நீக்காமல், அந்த நிகழ்ச்சியை, பிபிசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அப்லோட் செய்துள்ளது.

அதனால் பிபிசிக்கு எதிரான ட்விட்டரில் Boycott BBC என்ற ஹேஷ்டெக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :