• TRENDING | பர பர

ஆத்தாடி.. மெகா சைஸ் பரோட்டா..அதுக்கு சைட் டிஷ் அல்வா!





மும்பையில், மஹிம் என்ற இடத்திலுள்ள ‘அல்வா பரோட்டா’ என்னும் இந்த கடையில் மெகா சைஸ் பரோட்டா விற்பனையில் சக்கை போடு போடுகிறது!

கடந்த 15 ஆண்டுகளாக இந்த இடத்தில் வியாபாரம் செய்துவருகிறார் இந்த புரோட்டா மாஸ்டர். முதலில் தோசைக்கல்லில் நெய்யைக் கொட்டி கல் முழுக்க பரத்திவிடுகிறார். பின்னர் மைதா மாவைப் பிசைந்து, தனது கைகளாலேயே பெரிதாக வட்டவடிவில் புரோட்டா தட்டி, தோசைக்கல் நெய்யில் போட்டு பொன்னிறமாகும்வரை வேகவைத்து எடுக்கிறார்.

ஒரு பரோட்டா சாப்பிட்டாலே வயிறு திம்மென்று ஆகும் வகையில் பெரிய சைஸ் பரோட்டா.. அதற்கு சைட்டிஷ்ஷாக அல்வா! ஆஹா.. இந்த காம்பினேஷனை அடித்துகொள்ள ஆளில்லை என்று சொல்லும் அளவுக்கு இந்த கடையில் கூட்டம் மொய்க்கிறது. தற்போது இது சம்பந்தமான ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகிறது.

Video link : https://www.facebook.com/street.food.videos/videos/904248356801269/

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :