• TRENDING | பர பர

உலகின் மிகப் பழைய டைனோசர் புதைப்படிவம்! அர்ஜெண்டினாவில் கண்டுபிடிப்பு!





அர்ஜென்டினாவில் உலகின் மிகவும் பழமையான டைனோசராக கருதப்படும் டைட்டனோசரின் புதை படிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை இந்த புதை படிவத்தைக் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்து தெரிவித்ததாவது: இந்த டைனோசார் சைவ உணவைச் சாப்பிடும் வகியைச் சேர்ந்தது. இது நீண்ட கால்கள் மற்றும் நீண்ட கழுத்துடன் கூடியது. மேலும் செடிகொடிகளை சாப்பிடும் டைனோசர் வகைகளில் ஒன்றாக கருதப்படும் நிஞ்ஜாட்டிடன் சபாடாய் வகையைச் சேர்ந்தது.. கிட்டத்தட்ட 140 மில்லியன் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த விலங்கினம்.

-இவ்வாறு அர்ஜெண்டினா தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த நிஞ்ஜாட்டிடன் வகை டைனோசர்கள்தான் முதன்முதலாக அழிந்துபோனது என்றும், இதன் முழுமையடையாத எலும்புக்கூடுதான் தற்போது, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து, ஆராய்ச்சி எழுத்தாளரான பப்லோ கல்லினா கூறுகையில், உலகில் பல இடங்களில் பல வகை டைனோசர்களின் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த நிஞ்ஜாட்டிடன் புதைபடிவம்தான் உலகிலேயே மிகவும் பழமையானது என்று கூறியுள்ளார்.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த நிஞ்ஜாட்டிடன் டைனோசர்கள் 65 அடி உயரமுடையது. தற்போது இந்த டைட்டனோசரின் எலும்புக்கூடை வைத்து, மேற்கொண்டு ஆராய்ச்சிகள் செய்து வருகின்றனர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :