• SPARKLES | மினுமினு

அஸ்ஸாம் தேயிலைத் தோட்டம்.. தேயிலை பறித்த பிரியங்கா காந்தி!


மணிகண்டன்





தற்போது அசாமில் தேர்தல் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, அங்குள்ள தேயிலை தொழிலாளர்களுடன் உற்சாகமாக கலந்துரையாடியதோடு, தேயிலைத் தோட்டத்தில் தேயிலை பறிப்பில் ஈடுபட்டார்.

தேர்தல் பிரச்சாரமாக அசாம் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரியங்கா காந்தி, பிஸ்வநாத் மாவட்டத்தில், லகிம்பூர் தோட்டத்தில் தேயிலை பறிக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் பழங்குடியின பெண்களிடம் கலந்துரையாடினார். மேலும், அவர்களுடன் சேர்ந்து ஜூமூர் என்ற நடனத்தையும் ஆடியுள்ளார்.

முன்னதாக காமக்யா கோயிலில் வழிபட்ட பிரியங்கா காந்தி, அதனைத் தொடர்ந்து, அசாமுக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

தேயிலை தொழிலாளர்களுடன் கலந்துரையாடலை முடித்துக்கொண்டு, அவர்களுடன் சேர்ந்து பிரியங்கா காந்தி பறிப்பில் ஈடுபட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :