• TRENDING | பர பர

சர்வதேச நீச்சல் போட்டியில் பதக்கம்: நடிகர் மாதவனின் மகன் அசத்தல்!





நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், சர்வதேச அளவில் நீச்சல் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கங்களை வாங்கிக் குவித்துள்ளார். லவிட்டன் ஓபன் ஸ்விம்மிங் போட்டியில் வேதாந்த் கலந்து கொண்டு, வெண்கலம் பதக்கத்தை வென்று பெருமை சேர்த்ததைத் தொடர்ந்து, அதன் புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் மாதவன் ஷேர் செய்துள்ளார்.

இந்தியா சார்பில், லவிட்டன் நீச்சல் போட்டியில் மூன்று பேர் கலந்து கொண்டனர். அதில், ஒரு தங்கம் மற்றும் 2 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளனர். 200 மீட்டர் ஆண்கள் பட்டர்பிளை நீச்சல் போட்டியில், சஜன் பிரகாஷ் என்பவர் தங்க பதக்கத்தை வென்றுள்ளார். தனிஷ் மற்றும் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் ஆகியோர் பட்டர்பிளை மற்றும் ஃப்ரீ ஸ்டைல் போட்டிகளில் கலந்து கொண்டு 2 வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளனர்.

இந்நிலையில், தனது மகன் வேதாந்த், வெண்கலப்பதக்கம் வென்றதையடுத்து, இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள மூவரும் இருக்கும் புகைப்படத்தை நடிகர் மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதையடுத்து நெட்டிசன்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Twitter link : https://www.instagram.com/p/CL3Ctf0jYKz/

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :