• 5 SHOTS | சுறு சுறு





திருத்தணி முருகன் மார்பில் சிறு பள்ளம் உண்டு. தாராசுரனை வென்றபோது அவனிடமிருந்து திருமாலின் சக்கரத்தை மீட்டு பத்திரமாக மார்பில் பொதித்து வந்து திருமாலிடம் திரும்பக் கொடுத்தானாம் முருகன். அதனால் முருகனின் திருமார்பில் சந்தனத்தைப் பொருத்தியெடுத்து அடியவர்கட்குப் பிரசாதமாக வழங்குகிறார்கள். இச்சந்தனம் தீராத வியாதிகளைத் தீர்க்க வல்லதாம். பெருமாள் கோயில் சடாரி போல் இங்கு முருகனின் திருப்பாதச் சின்னங்களை அடியார்களின் தலையில் சார்த்தும் வழக்கமும் உள்ளது. - செ. கலைவாணி, மேட்டூர் அணை.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :