• 5 SHOTS | சுறு சுறு





பழங்காலத்தில் ரோமானியர்கள் சிறு குச்சிகளை ‘பிரஷ்’ போல செய்து இலைகளின் சாற்றில் தோய்த்து எழுதியதால் ‘பென்சிலஸ்’ என்று பெயர் வந்தது. லத்தீன் மொழியில் ‘பென்சிலஸ்’ என்பதற்கு ‘சிறுவால்’ என்ற பொருள். ‘பென்சிலஸ்’ என்ற சொல்லில் இருந்துதான் ஆங்கிலத்தில் ‘பென்சில்’ என்ற பெயர் வந்தது!

பிரிட்டனில்தான் 1564-ல் பென்சில் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டது. பென்சிலின் மூலப்பொருள் கிராஃபைட்! தண்ணீருக்கடியிலும் பென்சிலால் எழுத முடியும்! விண்வெளி வீரர்கள் பெரும்பாலும் குறிப்பு எழுதுவதற்குப் பயன்படுத்துவது பென்சில்தான்! - ப. முரளி, சேலம்

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :