• TRENDING | பர பர

ஒரு டீயின் விலை 1000 ரூபாயாம்! அடேங்கப்பா! அப்படியென்ன ஸ்பெஷல்?!





கொல்கத்தாவில் ஒரு சிறிய தேநீர் கடையில் ஒரு கப் டீ என்ன விலை தெரியுமா? 1000 ரூபாய்!

கொல்கத்தாவைச் சேர்ந்தவர் பார்த்தா பிரதிம் கங்குலி. முகுந்த்பூரில், கடந்த 2014 ஆம் ஆண்டில் நிர்ஜாஸ் என்ற டீக்கடையை தொடங்கி, அதில் ரூ.35 முதல் ரூ.1,000 வரையிலான பல்வேறு டீ வகைகளை விற்பனை செய்கிறார். இவரது டீக்கடை சாதாரண ரோட்டோர சிறிய ஸ்டால்தான்! ஆனால் கொல்கத்தாவின் மிகவும் பிரபலமான தேநீர் கடை இது!

இங்கு, 100 க்கும் அதிகமான டீ வகைகள் தயாரிக்கப்படுகிறது. அதில் போ-லே என்ற தேநீரின் விலை தான் 1000 ரூபாய். இந்த தேயிலையின் விலை ஒரு கிலோவுக்கு 3 லட்சம் ரூபாயாம். அதனால்தான் இந்த தேயிலையில் தயாரிக்கப்படும் டீயின் விலை கூடுதலாம்.

இதுதவிர, லாவெண்டர் தேநீர், நீல திஷன் தேநீர், வெள்ளை தேநீர், மது தேநீர், கார்ன்பரி தேநீர், ரூபியோஸ் தேநீர் மற்றும் ஆக்டி தேநீர் ஆகியவை இங்குள்ள மற்ற தேயிலை வகைகளில் அடங்கும்.

பார்த்தா பிரதிம் கங்குலி, ஏழு ஆண்டுகளுக்கு முன்புவரை ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அதன்பின், ஏதாவது சொந்த தொழிலைச் செய்யலாம் என நினைத்து, அதையும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என எண்ணி இந்த தேநீர் கடையைத் துவங்கியதாகக் கூறியுள்ளார்.




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :