• TRENDING | பர பர

ஓடும் ரயிலில் சிக்கியவரை மீட்ட போலீசார்! திக்… திக்… வீடியோ!





கோவையில், ஒடும் ரயிலில் ஏற முயன்றபோது, சரசரவென இழுத்துச்செல்லப்பட்ட பயணி ஒருவரை, விரைந்து செயல்பட்டு காப்பாற்றிய ரயில்வே போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

கோவை ரயில் நிலையத்தில், இன்று காலை 4.30 மணியளவில் திருவனந்தபுரத்திலிருந்து ஹைதராபாத் செல்லும் ரயில் 3-வது நடைபாதையில் வந்துள்ளது. அப்போது, ஓடிக்கொண்டிருந்த அந்த ரயிலில் பயணி ஒருவர் ஏற முயற்சித்து கால்தடுமாறி கீழே விழுந்தார். ஆனால், ரயிலின் கம்பியை இறுக்கமாக பிடித்துக்கொண்டதால், ரயில் வண்டியின் கூடவே இழுத்துச் செல்லப்பட்டு, தப்பிக்க பேராடினார். இந்நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே போலீசான ஸ்ரீஜித் சில நொடிகளிலேயே வேகமாக செயல்பட்டு அந்த நபரின் உயிரை காப்பாற்றினார்.

வேகமாக செயல்பட்டு உயிரைக் காப்பாற்றிய அந்த காவலருக்கு ரயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் பயணிகள் அனைவரும் பாராட்டு தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வீடியோவை ரயில்வே போலீசார் வெளியிட்ட நிலையில் வைரலானது. நெட்டிசன்கள் அந்த போலீசாருக்கு பாரட்டுகள் தெரிவித்துவருகின்றனர்.

Twitter link : https://twitter.com/karthisathees/status/1366039190069121033

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :