• TRENDING | பர பர

41 கிலோ மர்ம உலோகப் பந்து! விண்கலத்தின் ஒரு பகுதி?





பஹாமாஸில் உள்ள ஒரு கடற்கரை பீச்சில் 41 கிலோ எடையுள்ள ஒரு மர்மமான உலோகப் பந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனுடைய சைஸ், மற்றும் அதில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்களை வைத்துப் பார்க்கும்போது அது விண்கலத்தின் ஒரு பகுதியாகவும் இருக்கலாம் எனவும் அறிவியல் வல்லுநர்கள் நம்புகிறார்கள்.

சமீபத்தில், பஹாமாஸ் நாட்டின் ஹார்பர் தீவில், மனோன் கிளார்க் என்ற பெண், தனது குடும்பத்தினருடன் இருந்தபோது, உலோக பந்து ஒன்று மணலில் இருந்து வெளியேறுவதைப் பார்த்துள்ளார். ஆனால் அது மிகவும் கனமாக இருந்ததால் அவரால் அதை வெளியே எடுக்க முடியவில்லை. அதனால் அதை புகைப்படங்கள் மட்டும் எடுத்தார்.

இந்த உலோக பந்து எப்படி, இந்த கடற்கரை மணலில் புதையுண்டது என்பது பற்றி இன்னும் அறியப்படவில்லை. இருந்தாலும, இது ஒரு செயற்கைக்கோளின் அல்லது விண்கலத்திலிருந்து வெளிவந்த ஒரு பாகமாக இருக்கலாம் என்றும் விண்வெளி வல்லுநர்கள் நம்புகிறார்கள்.

மேற்பரப்பில் உள்ள ரஷ்ய எழுத்துகளின்படி, அந்த பொருளின் இயக்க வெப்பநிலை வரம்பை -170 and C மற்றும் -196° C மற்றும் சுமார் 43 லிட்டர் கொள்ளளவு கொண்டது என்று அறியப்படுகிறது. இந்த உலோகப் பந்து கியூபாவைச் சேர்ந்ததாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :