• TRENDING | பர பர

ஸ்கூட்டர் ஓட்டி தடுமாற்றம்: சுதாரித்த முதல்வர்! வைரல் வீடியோ!





நாட்டில் தலைவிரித்தாடும் பெட்ரோல் டீசல் விலை உயர்வவைக் கண்டித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயணம் செய்தபோது தடுமாறி கீழே விழ பார்த்தார். அதுசம்பந்தமான வீடியோ ஒன்று, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் பெட்ரோல், டீசல் விலையுயர்வைக் கண்டித்து, எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் கொல்கத்தாவின் ஹசாரா மோரிலிருந்து, தலைமை செயலகம் வரை 5 கி.மீ தூரம், பயணம் செய்தார். அமைச்சர் ஹக்கீம் ஸ்கூட்டரை ஓட்ட, மம்தா பானர்ஜி ஸ்கூட்டரின் பின்னால் அமர்ந்தபடி, விலை உயர்வு குறித்து மோடியை விமர்சிக்கும் பதாகையை கழுத்தில் அணிந்தபடி பயணித்தார்.

பின்னர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மம்தா பானர்ஜி தானே ஓட்ட முயன்றார். அப்போது பேலன்ஸ் தவறி கீழே விழப் பார்த்தார். உடனே, அருகே இருந்த பாதுகாவலர்கள் அவரை கீழே விழாமல் தாங்கிப் பிடித்துக் கொண்டனர். பின்னர் சுதாரித்து எழுந்த மம்தா பானர்ஜி ஸ்கூட்டரை மறுபடியும் தானே ஓட்டத் தொடங்க, அவருக்குக் கூடவே பாதுகாவலர்களும் ஓடி வந்தனர். இது தொடர்பான வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Twitter link : https://twitter.com/ANI/status/1364909745866297350




Comments

கேஆர்எஸ் சம்பத் says :

அம்மாவுக்கு குனிந்து வணக்கம் செய்த அதிமுக அமைச்சர்களை கிண்டல் செய்தவர்கள், ஜெயலலிதா , தன் வீட்டிலிருந்து கோட்டை வரும்வரை போக்குவரத்துகளை நிறுத்தி வைத்ததை விமர்சித்தவர்கள் - இந்த வீடியோவைக் கண்டு என்ன சொல்வார்களோ ?

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :