• TRENDING | பர பர

10 லட்சத்துல ஒண்ணு: இந்த அரிய வகை குருவி!





தற்போது இணையத்தில், கார்தினால் எனப்படும் அரியவகை குருவி ஒன்றன் புகைப்படம் வைரலாகிவருகிறது.

தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் காணப்படும் பறவை இனங்களில் முக்கியமானது கார்தினால் எனப்படும் ஒருவகை சிவப்புக்குருவி. தென் அமெரிக்காவைத் தவிர, கனடா, மெக்சிகோ போன்ற பகுதிகளிலும், இந்த வகையான குருவி அதிகம் காணப்படுகிறது.

இந்த கார்தினால் குருவிகளில் ஆண் குருவியானது சிவப்பு நிறத்திலும், பெண் குருவியானது சாம்பல் நிறத்திலும் காணப்படுமாம். ஆனால் இந்த குருவியில், ஒரு முக்கிய சிறப்பம்சம் என்னன்றால், இந்த இனத்தில் 10 லட்சம் குருவிகளில் ஒரு குருவி மட்டும் உடலின் ஒருபாதி சிவப்பாகவும், மறுபாதி சாம்பல் நிறமாகவும் காட்சியளிக்குமாம்.

இந்நிலையில், பறவை ஆர்வலரான ஜேமி ஹில் என்பவர் அமெரிக்கா கிராண்ட் வேலி பகுதியில், இந்த அரியவகைக் குருவியை கண்டு, அதனை புகைப்படமாக எடுத்து, தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Facebook link : https://www.facebook.com/james.hill.3386/posts/10220986740391083

Comments

கேஆர்எஸ் சம்பத் says :

Interesting

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :