• TRENDING | பர பர

பிரபல இயக்குனரின் மகள் திருமணம்: வைரல் போட்டோஸ்!





’காதல் கோட்டை’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் அகத்தியனின் மகள் நிரஞ்சனி. இவர் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில், இரண்டாவது ஹீரோயினாக, நடிக்கும்போது, அப்படத்தின் இயக்குனர் தேசிங் பெரியசாமியுடன் காதல் மலர்ந்தது. இதையடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் நேற்று பாண்டிச்சேரியில் கோலாகலமாக திருமணம் நடந்தது.

மேலும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை, சென்னையில் வைத்து நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். இவர்களின் திருமணத்திற்கு நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளம் மூலம், தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில், இந்த தம்பதியின் திருமண புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் அகத்தியனின் மூத்த மகள் கனி, அடுத்த மகள் விஜயலட்சுமி, இப்போது கடைசி மகள் நிரஞ்சனி ஆகிய மூவருமே திரைப்பட இயக்குனர்களை திருமணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது!




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :