• JUST IN | சுட சுட

புதுச்சேரி: அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி!





புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு, அக்கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் பலரும் அடுத்தடுத்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் அரசுக்கு பெரும்பான்மை இல்லையென எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.

இதனிடையே துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி நீக்கப்பட்டு, தெலங்கானா ஆளுநராக உள்ள தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜனுக்கு, புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த சூழலில், புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததால் கடந்த 22 ஆம் தேதி நாராயணசாமி தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.நாராயணசாமி அமைச்சரவையின் ராஜினாமா ஏற்கப்பட்ட நிலையில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது குறித்து பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை அடுத்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், புதுச்சேரியில் தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வந்துள்ளார்.




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :