• JUST IN | சுட சுட

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை! இனி இறங்கு முகம்தான்!





இப்போது 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டதால், கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது.

இந்நிலையில் இன்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.35,144-க்கு விற்பனையானது. நேற்று மாலை மீண்டும் சவரனுக்கு 168 ரூபாய் குறைந்தது. இந்நிலையில் இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.34,976-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ.4,372-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 74,700 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 500 ரூபாய் உயர்ந்த நிலையில் மாலையில் 200 ரூபாய் குறைந்து ரூ.75,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.75.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.




Comments

ஆா்.நாகராஜன் says :

ஏழை வயித்தக்கட்டி வாயக்கட்டி குருவி சேக்கறது மாதிாி காசு பணம் சோ்த்து நகை வாங்கலாம்னா விலை யான வெல குதிர வெலன்னா என்ன செய்யறது ஏழை பாழைக்கெல்லாம் தங்கம் எட்டாக்கனிதாஞ்சாமியோவ்

கேஆர்எஸ் சம்பத் says :

என்றும் மாறாதது ;ஏற்றம் இறக்கம் இல்லாதது ;புன்னகை(பூ நகை)!!! இதுவே பெண்களின் அழகை கூடுதலாக்கும் . சிரித்து வாழவேண்டும்````````````````` பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே அவ்வளவுதாங்க

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :