• SPARKLES | மினுமினு

சைக்கிள் பயணத்தில் அஜித் - லேட்டஸ்ட் போட்டோஸ்!


நாகராஜ் சர்மா.





நடிகர் அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் துப்பாக்கி சுடுதல் பயிற்சிக்காக சென்னை எழும்பூரில் உள்ள பழைய கமிஷனர் அலுவலகத்துக்கு அஜித் வந்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின.

இந்நிலையில் தற்போது அஜித் தனது நண்பர்களுடன் சைக்கிளிங் சென்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி ட்ரோன் தயாரித்தல், துப்பாக்கி சுடுதல், கார் ரேஸ், பைக் ரேஸ் உள்ளிட்டவற்றில் அதிக ஆர்வம் செலுத்தி வரும் அஜித் சைக்கிள் பயணத்திலும் தீவிரம் காட்டி வருகிறார்.

வலிமை அப்டேட் கேட்டு வரும் ரசிகர்களுக்கு அஜித்தின் இந்த புதிய புகைப்படங்கள் தீனியாக அமைந்துள்ளன.




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :