• TRENDING | பர பர

பந்தில் எச்சில் பூசிய பென் ஸ்டோக்ஸ்: கடும் எச்சரிக்கை விடுத்த அம்பயர்!





இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 3-வது டெஸ்ட் போட்டி, நேற்று தொடங்கியது. இந்நிலையில், ஆட்டத்தின்போது, இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் கிரிக்கெட் பந்தில் எச்சில் தடவியதால், பெரும் சர்ச்சையாகி உள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி, நரேந்திரமோடி மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், முதல் இன்னிங்சில் இந்தியா பவுலிங்கில் ஆதிக்கம் செலுத்திவந்ததால், இங்கிலாந்து அணி 112 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து இந்திய அணி களமிறங்கி விளையாடி வருகிறது. இந்நிலையில், நேற்று நடந்த ஆட்டத்தில், பென் ஸ்டோக்ஸ் பவுலிங்கின் போது கிரிக்கெட் பந்தில் எச்சில் தடவினார். கிரிக்கெட் வீரர்கள் பந்தை சொரசொரப்பாக வைத்துக்கொள்ள, எச்சில் தடவுவார்கள். அப்படி செய்வதால், பந்து நன்றாக ஸ்விங் ஆகும்.

தற்சமயம், கொரோனா பாதுகாப்பு கருதி, பந்தில் எச்சில் தடவுவது தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் கிரிக்கெட் பந்தில் எச்சில் தடவி மாட்டிக்கொண்டார். ஒரே அணி இரண்டு முறை இதுபோன்ற தவறை செய்தால், அவர்களின் ஸ்கோரில் 5 ரன்கள் குறைக்கப்படும்.

நேற்று இங்கிலாந்து அணியில் அவர் மட்டும் அந்த தவறை செய்ததால், அம்பயர் கடுமையான வார்னிங் மட்டுமே கொடுத்தார். பின்னர், சானிடைசர் மூலம் பந்தை லேசாக துடைத்தனர். அதன்பின் அந்த பந்து மீண்டும் பவுலிங்கிற்கு கொடுக்கப்பட்டது.

Comments

கேஆர்எஸ் சம்பத் says :

தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை .

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :