• TRENDING | பர பர

#GoBackModi: பிரதமர் மோடிக்கு டிவிட்டர் ஹேஷ்டேக்!





பிரதமர் மோடி இன்று காலை தமிழகம் வழியாக புதுச்சேரி சென்று அங்கு பல நலதிட்டங்களைத் துவக்கி வைத்தார். அவரது வருகைக்கு #GoBackModi என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் இன்று கோவையில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரத்திற்கு பிரதமர் மோடி பங்கேற்று பேச உள்ளார்.

பிரதமர் மோடி தமிழகம் வருவதால் வழக்கம் போல #GoBackModi என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து #TNWelcomesModi என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :