• TRENDING | பர பர

அஸ்வினைக் கவர்ந்த ஜார்ஜ் குட்டி! நன்றி கூறிய மோகன்லால்!





சமீபத்தில், மோகன்லால் நடிப்பில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றிபெற்ற ‘த்ரிஷ்யம் 2’ படத்தை பார்த்த இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின், அதைப் பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.

கடந்த 2013ம் ஆண்டு, மோகன்லால் நடிப்பில் வெளியாகி பிரம்மாண்டமாக வெற்றிபெற்ற படம்தான் ‘த்ரிஷ்யம்’. இதை ஜீத்து ஜோசப் இயக்கியிருந்தார். இதில் மோகன்லால் ஜார்ஜ் குட்டி எனும் கேரக்டரில் அருமையாக வாழ்ந்து நடித்திருப்பார். அதே படம் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் அங்குள்ள முன்னணி ஹீரோக்களை வைத்து எடுத்ததிலும் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

ரீமேக் செய்து வெளியிடப்பட்ட அனைத்து மொழி சினிமாக்களிலும் வெற்றி கிட்டியதால், அதன் 2ம் பாகத்திற்கான ஸ்கிரிப்டை கடந்த 4 ஆண்டுகளாக பார்த்துப்பார்த்து தயார் செய்து ‘த்ரிஷ்யம் 2’ வாக கடந்த 19ம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியிட்டார் ஜீத்து ஜோசப்.

முதல் பாகத்தைப் போன்றே சஸ்பென்ஸ், த்ரில் என அனைத்தும் 2ம் பாகத்திலும் இடம்பெற்றுள்ளதால், அனைத்து தரப்பினராலும் வெகுவாகக் கவரப்பட்டுள்ளது. படத்தின் வெற்றியைப் பார்த்த பலரும், சப்டைட்டிலுடன் மலையாளத்தில் பார்த்து வருகின்றனர்.

முதல் பாகத்தை பார்க்காமல், ‘த்ரிஷ்யம் 2’-வைப் பார்த்த பலரும் அதன் முதல் பாகத்தையும் பார்க்க ஆவலோடு இருக்கிறார்கள். இந்நிலையில்தான் இந்திய கிரிக்கெட் வீரரான அஸ்வினும் ‘த்ரிஷ்யம் 2’ படத்தை பார்த்து ரசித்துள்ளதோடு, படம் குறித்து ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார்.

அதில், ‘த்ரிஷ்யம் 2’-வின் நீதிமன்ற காட்சியில், ஜார்ஜ் குட்டியின் ட்விஸ்ட், என்னை வெகுவாகக் கவர்ந்ததோடு, சத்தமாக சிரித்துவிட்டேன். இந்தப் படத்தை நீங்கள் பார்க்கவில்லை எனில், முதலில் ‘த்ரிஷ்யம் 1’ம் பாகத்திலிருந்து ஆரம்பியுங்கள். அருமையாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

அஸ்வினின் இந்த ட்வீட்டை பார்த்த மோகன்லால், உங்களுடைய பிசியான நேரத்தையும் ஒதுக்கி ‘த்ரிஷ்யம் 2’ பார்த்ததோடு, அதுகுறித்து பேச நேரம் ஒதுக்கியதற்கு மிக்க நன்றி கூறி, வாழ்த்துக்களையும் தெரிவித்து பதில் அளித்திருக்கிறார்.

Twitter link : https://twitter.com/Mohanlal/status/1364135718369431552

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :