இங்கிலாந்தில், மெக்டொனால்ட் கடையில், பேரன் ஆசைப்பட்ட ஹேப்பி மீல் வாங்கிய முதியவருக்கு ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் லூட்டன் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் பாப்பேஜ் என்ற 75 வயதான முதியவர். இவர் தனது பேரக்குழந்தைகளுடன் அந்த பகுதியில் காரில் சென்றுள்ளார். அப்போது அவரது 12 வயதான பேரன் டெய்லர் மெக்டொனால்டில் ஹேப்பி மீல் சாப்பிட ஆசைப்பட்டுள்ளார். உடனே அந்த முதியவரும் 2.79 டாலர் கொடுத்து அதை பேரனுக்கு வாங்கிக் கொடுத்துள்ளார். இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 200 ரூபாயாகும்.
அதன்பின்னர்தான் முதியவருக்கு பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அவருடைய பேரக்குழந்தைகள் காரில் விளையாடிக் கொண்டிருந்ததால், அந்த முதியவரோ காரிலேயே, சிறிது அசந்து தூங்கி விட்டார். இந்நிலையில் அவருக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட, அதிக நேரம் அவரது கார் பார்க்கிங் செய்யப்பட்டிருந்ததால் விதிமுறைகளை மீறியதாகக் கூறி, முதியவருக்கு 2,800 டாலர் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 2 லட்ச ரூபாய்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பேரன் ஆசைப்பட்டதால், வெறும் 200 ரூபாய்க்கு உணவு வாங்கிய முதியவருக்கு இவ்வளவு அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அனைருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments