• TRENDING | பர பர

விரைவில் ஹீரோவாக திரையில் வடிவேலு! இயக்கப் போவது யார் தெரியுமா?





பல ஆண்டுகளாக திரையில் வராமல் இருந்த வடிவேலு விரைவில் திரையில் ஹீரோவாக வலம் வரவிருக்கிறார். இயக்குநர் திருமுருகன் வடிவேலுவை வைத்து இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடிப்பில், 2006ல் வெளியான ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படம் பெரும் வெற்றி பெற்றதையடுத்து, இதன் இரண்டாம் பாகமாக இம்சை அரசன் 24ம் புலிகேசி படம் எடுக்க திட்டமிடப்பட்டது. ஆனால் அந்த படத்தில் இருந்து வடிவேலு வெளியேறிய பிறகு அவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து, வடிவேலுவை திரையில் பெரிதும் பார்க்க முடியாமல் போக, வீட்டிலேயே முடங்கினார். இந்நிலையில் சென்னையில் நடந்த நண்பர்கள் சந்திப்பில், வருத்தப்பட்டு பேசிய வடிவேலு, தனக்குள் தெம்பும், ஆசையும் உள்ளது. ஆனால் யாரும் வாய்ப்பு தருவதில்லை என்றும், தனது சினிமா கெரியர் இப்படி ஆகிவிட்டதே என்றும் கண் கலங்கியுள்ளார்.

இந்நிலையில், வடிவேலு, திருமுருகன் இயக்கத்தில் ஒரு புது படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் அரசல் புரசலாக கசிந்துள்ளது.

இயக்குநர் திருமுருகன், ‘மெட்டி ஒலி’ உள்பட பல சீரியல்களை எடுத்து பிரபலமானவர். அதோடு, ‘எம் மகன்’ என்ற வெற்றிப்படத்தையும், இயக்கியுள்ளார். அதில், பரத், கோபிகா, வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்ளில் நடித்திருந்தார்கள்.

இந்நிலையில்தான், தற்போது திருமுருகன் புதுப்படம் ஒன்றை இயக்குவதாகவும், அது சம்பந்தமாக வடிவேலுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அறியப்படுகிறது. குடும்பப் பின்னணியில் உருவாகும் அந்தப் படத்தில் வடிவேலுவுக்கான கதாபாத்திரம், ஒரு ஹீரோவுக்கான முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கூறப்படுகிறது.

இன்னும் சில வாரங்களில் இது சம்பந்தமான செய்திகள் உறுதி செய்யப்படலாம் எனவும் அறியப்படுகிறது. பல காலமாக திரையில் வடிவேலுவைக் காணமுடியாமல் தவித்து வந்த ரசிகர்களுக்கு, வடிவேலு ஹீரோவாக நடிப்பது உறுதியானால், நிச்சயம் சந்தோஷப்படுவார்கள்.

Comments

கேஆர்எஸ் சம்பத் says :

வந்துட்டாருய்யா வடிவேலு வந்துட்டாருய்யா ...............

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :