• TRENDING | பர பர

குழந்தையின் அழகிய புகைப்படத்தை வெளியிட்ட நடராஜன்!





இந்திய கிரிக்கெட்டில் நம்பிக்கை நட்சத்திரமாகவும், யார்க்கர் பவுலராகவும் பெரிதும் எதிர்பார்க்கப்படுபவர் நடராஜன். கடந்தாண்டு நடந்த ஐபிஎல்லில் 15 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர்.

அதன்பின் இந்தியா அணி, ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் மேற்கொண்டபோதும் அதில் இடம்பெற்று, ஆஸ்திரேலியா அணியை திணறடித்தார். அதேசமயம், ஆஸ்திரேலியா சென்று திரும்பிய யார்க்கர் நடராஜனுக்கு அவரது சொந்த ஊரில் பிரமாண்ட வரவேற்பும் அளிக்கப்பட்டது.

கடந்த நவம்பர் மாதம், இவர் ஐபிஎல் சீசனில் விளையாடிக் கொண்டிருந்தபோதுதான், தனக்கு பெண் குழந்தை பிறந்திருந்ததை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் தனது குழந்தையின் புகைப்படத்தை அவர் வெளியிடவில்லை.

தற்போது, நடராஜன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் ‘லிட்டில் ஏஞ்சல் ஹன்விகா, நீதான் எங்கள் வாழ்க்கையின் முக்கியமான பரிசு. எங்களுடைய வாழ்க்கை இவ்வளவு சந்தோஷமாக இருக்க நீதான் காரணம்’ என்று பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :