• JUST IN | சுட சுட

திருமண தடை நீங்க வாரணாசியில் சிம்பு பரிகாரம்?!





வாரணாசி காசி நதிக்கரையில் சிம்பு பூஜை செய்யும் புகைப்படங்கள் வெளியானதை அடுத்து பல்வேறு யூகங்கள் கோலிவுட்டில் உலா வர தொடங்கியுள்ளன.

கடந்த பொங்கலுக்கு சிம்பு நடிப்பில் வெளியான `ஈஸ்வரன்` படம் பெரியளவில் வரவேற்பு பெறவில்லை. இதையடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு, கிருஷ்ணா இயக்கத்தில் ’பத்து தல’, கவுதம் மேனன் இயக்கத்தில் ஒரு புதிய படம் என வரிசையாக படங்களில் கமிட்டாகியுள்ளார்.

இதற்கிடையில் காதலர் தினத்துக்கு முந்தைய நாளில், தன்னுடைய வளர்ப்பு நாயிடம் திருமண ஆசை குறித்து அவர் பேசி வெளியிட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. அதை பார்த்த சிம்புவின் ரசிகர்கள், விரைவில் அவருக்கு திருமணம் நடக்கவேண்டும் என கருத்து பதிவிட்டு இருந்தனர்.

இந்நிலையில் உத்தரப் பிரதேசம் வாரணாசிக்கு சென்றுள்ள சிம்பு, அங்கு கங்கை நதிக்கரையில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்துவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இதுதொடர்பான ட்விட்டரில் கருத்து பதிவிடும், பலர் இதுபோன்ற சடங்குகள் பொதுவாக, திருமண தடை உள்ளவர்களுக்காக நடத்தப்படும். ஒருவேளை சிம்புக்கு திருமண தடை இருக்கலாம், அதற்காக இந்த பரிகாரம் செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.


Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :