• JUST IN | சுட சுட

கொரோனாவுக்கு பதஞ்சலி மருந்து: இந்திய மருத்துவக் கழகம் அதிர்ச்சி!





உலகம் முழுவதும் கொரோனாவிற்கு எதிராக போராடி வருகிறது. சில நாடுகள் அவசரகால பயன்பாட்டிற்காக தடுப்பூசிகளை அறிவித்துள்ளன.

அந்த வகையில் இந்தியாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கோவேக்சின், மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ‘’கொரோனாவை எதிர்கொள்ளும் திறன் பெற்றது’’ என்ற விளம்பரத்துடன் பதஞ்சலி நிறுவனம் ’கரோனில்’ என்ற மாத்திரையை அறிமுகம் செய்தது. இந்த விழாவில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ,மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து இந்திய மருத்துவக் கழகம் கேள்வி எழுப்பியுள்ளது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் இப்படி அறிவியல்பூர்வமாக அங்கீகாரம் பெறாத மருந்தை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்கலாமா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.


Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :