• JUST IN | சுட சுட

பிப்ரவரி 30-ம் தேதியில் இறப்பு சான்றிதழ்: எழுந்தது சர்ச்சை!





தாசில்தார் மாவட்ட அலுவலகத்தில் உலகிலேயே இல்லாத தேதியில் பிறப்பு சான்றிதழ் வழங்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் தாசில்தார் அலுவலகத்தில் பிப்ரவரி 30-ம் தேதி என்று குறிப்பிட்டு இறப்பு சான்றிதழ் வழங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. விருதுநகர் மாவட்டம் செய்யம்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி அழகர்சாமி. 2000-ம் ஆண்டு இறந்துள்ளார்.

இதையடுத்து அழகர்சாமியின் இளையமகன் உதயகுமார் கடன் வாங்குவதற்காக தனியார் வங்கியின் உதவியை நாடியுள்ளார். அப்போது வங்கி அதிகாரிகள் அவரிடம் வாரிசு சான்றிதழ் கேட்டுள்ளனர். இதனை தொடர்ந்து உதயகுமாரும் வங்கி அதிகாரிகளிடம் வாரிசு சான்றிதழ் வழங்கியுள்ளார்.அதை அதிகாரிகள் சரிபார்த்தபோது உதய குமாரின் தந்தை அழகர்சாமி இறந்த தேதி 30. 2. 2000 என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை பார்த்த வங்கி அதிகாரிகள் உதயகுமாருக்கு கடன் தர மறுத்துள்ளனர். வாரிசுசான்றிதழ் மட்டும் அல்ல, அழகர்சாமியின் பிறப்பு சான்றிதழில் கூட அவர் இறந்த தேதி தவறாக குறிப்பிடப்பட்டிருந்துள்ளது.

இதனை தொடர்ந்து உதயகுமார் தாசில்தார் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதிகாரிகள் உதய குமாரின் தந்தை அழகர்சாமியின் இறப்பு சான்றிதழ் விரைவில் மாற்றித் தரப்படும் என்று கூறியுள்ளனர். உலகிலேயே இல்லாத ஒரு தேதியை குறிப்பிட்டு இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் விருதுநகர் பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Comments

கேஆர்எஸ் சம்பத் says :

மல்லையாவிடமும் நிரவ் விடமும் கண்டுக்காத வங்கி அதிகாரிகள் , உதயகுமாரிடம் கண்ணில் விளக்கெண்ணை விட்டு பார்த்தது ஆச்சரியம் தாங்க...............

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :