• JUST IN | சுட சுட

முதல்வர் பழனிசாமிக்கு புது சிக்கல்: பதிலளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!





தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு, தமிழக அரசின் சார்பில் ‘வெற்றி நடைபோடும் தமிழகமே’ என்ற பெயரில் நாளிதழ், தொலைக்காட்சி, யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் வெளியிடப்பட்டு வருகிறது..

இந்த விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று திமுக சார்பில், அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர். எஸ், பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அரசு விளம்பரத்திற்கு செலவு செய்யப்பட்ட தொகையை அதிமுக கட்சியிடமிருந்து வசூலிக்க உத்தரவிடக் கோரி சமூக ஆர்வலர் ட்ராபிக் ராமசாமியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்..

இந்நிலையில் இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது திமுக தரப்பில் ஆஜரானார் வழக்கறிஞர் வில்சன். அவர் “மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டிய பணம், கடந்த 2 மாதங்களாக விளம்பரங்களுக்கா தவறான நோக்கில் பயன்படுத்தப்படுகிறது.. எனவே இந்த விளம்பரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளோம்’ என்று வாதிட்டார்.

தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர் அப்போது குறிக்கிடு, இந்த விளம்பரம் தொடர்பாக அதிமுகவிடம் விளக்கம் கேட்டு பெற்றுள்ளோம்.. தேர்தல் ஆணையம் அதனை பர்சிலீத்து வருவதால், இதுகுறித்து விரிவாக பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதனையடுத்து, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் “இந்த விளம்பரத்திற்கு 1000 கோடி ரூபாய் செலவழிக்கப்படவில்லை.. ஜி.எஸ்.டியுடன் சேர்த்து 64 கோடியே 72 லட்சம் மட்டும் செலவிடப்பட்டுள்ளது.. இந்த விளம்பரம் கடந்த 18-ம் தேதியுடன் நிறுத்தப்பட்டு விட்டது” என்று தெரிவித்தார்.

அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை மார்ச் 2-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். மேலும் இதுகுறித்து தமிழக அரசும், தேர்தல் ஆணையமும் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Comments

கேஆர்எஸ் சம்பத் says :

ஒண்ணுமே புரியல உலத்தில

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :