தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓபிஎஸ் 11-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து இருக்கிறார். இன்று 15-வது சட்டப்பேரவையின் கடைசி கூட்டத்தொடர் என்பதால் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
பட்ஜெட் தாக்கலின்போது திமுகவின் துரைமுருகன் பேச முயற்சித்தார். ஆனால் துரைமுருகனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு, வெளிநடப்பு செய்தனர். பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிப்பதாக துரைமுருகன் அறிவித்தார்.
திமுக ஆட்சி முடியும் போது தமிழகத்தின் கடன் ரூ.1 லட்சம் கோடியாக இருந்தது எனவும், தற்போது ரூ.5.7 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. நிதி நிர்வாகத்தை நிர்மூலமாக்கியதுதான் அதிமுகவின் சாதனை என்றும் திமுக பொருளாளர் துரை முருகன் பேட்டியளித்தார்.
Comments