• JUST IN | சுட சுட

#TNBudget2021: தமிழக இடைக்கால பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள்!





தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.

தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் வரவுள்ளதால், இன்று சென்னை வாலாஜாசாலை, கலைவாணர் அரங்கில் கூடும் சட்டப்பேரவையில் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.

அவர் 11-வது முறையாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார் என்பது குறிப்பிடப்படுகிறது. தமிழக பட்ஜெட்டில் இடம்பெற்ற பல்வேறு முக்கிய அறிவிப்புகள்:

.

• தமிழகத்தின் கடன் ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்வு - ஓபிஎஸ்

• கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.6,683 கோடி நிதி ஒதுக்கீடு.

• அடுத்து சில ஆண்டுகளில் தமிழகத்தில் 12,000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்.

• 2020-21 ஆம் ஆண்டுக்கான வருவாய் பற்றாக்குறை ரூ.41,417.30 கோடியாக இருக்கும்.

• மாநிலத்தின் மொத்த வரி வருவாய் ரூ.1,35,641 இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

• மின்துறைக்கு ரூ.7,217 கோடி, உயர்கல்வித்துறை ரூ.5,478 கோடி நிதி ஒதுக்கீடு.

• நடப்பு நிதியாண்டில் அதிகரித்துள்ள நிதி பற்றாக்குறையை தவிர்க்க இயலாது என ஓபிஎஸ் திட்டவட்டம்.

• கொரோனா வாராந்திர தொற்று 1%க்கும் குறைவாகவே உள்ளது.

• கொரோனா நோய் தொற்று இறப்பு விகிதம் கணிசமாக குறைந்துள்ளது.

• 1.68 கோடிக்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

• தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ13,352 கோடி ஒதுக்கீடு.

• ஒப்புதல் தரப்பட்ட அனைத்து பணிகளையும் நிறைவேற்ற 2021-22 ஆம் ஆண்டில் தேவையான நிதி ஒதுக்கப்படும்.

• வேளாண்துறை ரூ.11,982 கோடி நிதி ஒதுக்கீடு.

• தமிழக தொழில் முதலீட்டு கழகத்தை வலுப்படுத்த இடைக்கால பட்ஜெட்டில் ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு.

• தமிழக சுகாதாரத்துறைக்கு ரூ.19,420 கோடி நிதி ஒதுக்கீடு.

• பிரதமர் வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ.3,700 கோடி நிதி ஒதுக்கீடு.

• உள்ளாட்சி துறைகளுக்கு ரூ.22,218 கோடி நிதி ஒதுக்கீடு.

• நீர்வள துறைக்கு ரூ.6,453 கோடி நிதி ஒதுக்கீடு.

• காவல்துறைக்கு ரூ.9,567 கோடி நிதி ஒதுக்கீடு.

• நீதித்துறை நிர்வாகத்துக்கு ரூ.1,437 கோடி ஒதுக்கீடு.

• மீன்வளத்துறைக்கு ரூ.580 கோடி நிதி ஒதுக்கீடு.

• நெடுஞ்சாலை துறைக்கு ரூ18,750 கோடி நிதி ஒதுக்கீடு.

• பயிர் கடன் தள்ளுபடி திட்டத்திற்கு ரூ.5 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.

Comments

GirijaARagavan says :

ஓதுக்கிடுகள் இருந்தாலும்,, நடுத்தரமக்களுக்கு, தேவையான, காய்கறிகள, காஸ், பெட்ரோல் விலை குறைக்கப்படா மல் , இருப்பது, வேதனையை அளிக்கிறது

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :