• TRENDING | பர பர

சினிமாவில் வில்லன்: நிஜத்தில் போலீஸ்!





தமிழில் ‘திமிரு’, ‘கொம்பன்’, ‘பிகில்’ போன்ற படங்களில் வில்லனாக நடித்து, அனைவரின் கவனத்தையும் பெற்ற நடிகர் ஐ.எம்.விஜயனுக்கு கேரள காவல்துறை பதவி உயர்வு வழங்கி கௌரவித்துள்ளது.

கேரள மாநிலத்தில் திருச்சூரை பூர்வீகமாகக் கொண்ட ஐ.எம்.விஜயன், கேரளாவில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அதுமட்டுமில்லாமல், கால்பந்து போட்டியில் அதிக ஆர்வமுள்ள இவர், இந்திய அணிக்காக 60க்கும் அதிகமான போட்டிகளில் விளையாடி உள்ளார். இந்திய கால்பந்து அணியில் விளையாடிய காலகட்டத்தில், நான்காண்டுகள் இந்திய கால்பந்து அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார். அதன்பின்னர், போலீஸ் வேலையில் சேர்ந்து பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், அவர் திரைப்படங்களிலும் நடித்து வந்துள்ளார். தமிழில் ‘திமிரு’ படத்தின் மூலம் வில்லனாக அனைவரையும் மிரட்டிய அவர், அதன்பின், ‘கொம்பன்’, ‘பிகில்’ உட்பட பல படங்களிலும் மிரட்டி, அனைவரின் கவனத்தையும் பெற்றார்.

இந்நிலையில்தான், கேரள காவல்துறை தனக்கு பதவி உயர்வு அளித்துள்ளதாக டுவிட்டரில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் விஜயன். வில்லனாக வந்து நம்மை மிரட்டியிருந்தாலும், கம்பீரமான போலீஸ் அதிகாரியாக தோற்றமளிக்கும் விஜயனுக்கு வாழ்த்துக்கள் குவிந்துவருகிறது.




Comments

கேஆர்எஸ் சம்பத் says :

வாழ்த்துக்கள் போலீஸ் வில்லன் சார்......................

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :