• SPARKLES | மினுமினு

5 ஜி தொழில்நுட்பம்: உலகுக்கு ஆபத்து! விஞ்ஞானிகள் பகீர்!


கட்டுரை: ஹரிஹரன்





உலகில் 5 ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தினால் பூமிக்கும் மனிதகுலத்திற்கும் ஆபத்து என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இன்றைய காலகட்டத்தில் பொதுவாக பலரது வீடுகளில் மைக்ரோவேவ் அடுப்பு காணப்படுகிறது. இதில் உணவுகளை மிக சீக்கிரமாக சமைத்துவிட முடிகிறது! மைக்ரோவேவ் அடுப்புகள் எப்படி உணவு சமைக்கிறது என்பது தெரியுமா? அதிலிருந்து வெளீப்படும் சக்திவாய்ந்த கதிர்வீச்சுகள்தான். முட்டையை வெறும் 30 நொடிகளில் வேக வைத்து விடுகிறது! அந்தளவுக்கு மைக்ரோவேவ் அடுப்புகள் சக்திவாய்ந்தவை!

தற்போது பூமிக்கும் கிட்டதட்ட இதே நிலைதான்! சக்திவாய்ந்த 5 ஜி அலைக்கற்றைகள் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த பல முன்னணி நிறுவனங்கள் போட்டுக்கொண்டிருக்கிறது. ’’இந்த 5ஜி தொழில்நுட்பம் வருவதால் மொபைல் நெட்வொர்க் வேகமாக இருக்கும். வீடியோக்களை உடனுக்குடன் டவுன்லோட் செய்து பார்க்க முடியும்’’ என்றெல்லாம் காரணங்கள் சொல்லப்படுகிறது! ஆனால் இந்த தொழில்நுட்பத்துக்கு பின்னால் மறைந்திருக்கும் ஆபத்துக்களை பலரும் உணர்வதில்லை! உலக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஒருசில விஞ்ஞானிகள் மட்டுமே இந்த தொழில்நுட்பத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக செயல்படுத்த பூமியைச் சுற்றிலும் பூமியின் சுற்றுப்பாதையில் சுமார் 20,000 சாட்டிலைட்டுகள் அமைக்கப்பட வேண்டும். இந்த சாட்டிலைட்கள் பூமியை நோக்கி மைக்ரோவேவ் சிக்னலை அனுப்புகிறது! இவை பூமியை தாக்குவதால் பூமி வெப்பமடைந்து பெருமளவிலான காலநிலை மாற்றம் மற்றும் இயற்கைச் சீற்றத்தையும் சந்திக்க நேரிடும். அதை விட கொடூரமாக ஆபத்து என்னவென்றால் – மைக்ரோவ் அடுப்பில் கதிர்வீச்சின் வீர்யத்தால் சில நொடிகளில் முட்டைகள் வெந்து விடுவதுபோல, 5ஜி அலைக்கற்றைகளின் வீர்யம் பூமியில் உள்ள மக்கள் மற்றும் பிற உயிரினங்களையும் நாளுக்கு நாள் வேகமாக வேகவைத்து அழித்துவிடும் என்பதே உண்மை.

இவ்வளவு ஆபத்து நேரிடும் என்பதை தெரிந்தபின்னரும் 5ஜி தொழில்நுட்பம் தேவைதானா?!




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :