• TRENDING | பர பர

துப்பாக்கி முனையில் நேரலை வழிப்பறி: திகில் வீடியோ!





தென் அமெரிக்காவின் ஈக்வடார் பகுதியில் கடந்த வெள்ளியன்று (பிப்: 19) தனியார் செய்தி ஊடகத்தின் செய்தியாளர் ஒருவர் விறுவிறுப்பாக நேரலை செய்துக்கொண்டிருந்தார். அப்போது செய்தியாளரை நெருங்கிய ஒரு இளைஞர் திடீரென துப்பாக்கியை எடுத்து மிரட்டினார். அதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

அப்போது, நேரலையில் செய்தியாளர் மற்றும் குழுவினரிடம் இருந்த பணத்தை தன்னிடம் ஒப்படைக்கக் வேண்டும் என அந்த இளைஞர் துப்பாக்கி காட்டி மிரட்டிய காட்சிகள் பதிவாகியுள்ளன.

பின்னர் விசாரணையில், ஈக்வடார் ஸ்போர்ட்ஸ் பத்திரிகையாளர் டியாகோ ஓர்டினோலா என்பவர் குவாயாகில் நகரில் உள்ள ஒரு புராதனக் (Estadio Monumental) கட்டிடத்திற்கு வெளியில் இருந்து செய்திகளை நேரலையில் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு முகமூடி அணிந்து வந்த கொள்ளையர் செய்தியாளரின் முகத்தருகே ரிவால்வரை காட்டி தொலைபேசியை தருமாறு மிரட்டினார். பின்னர் அங்கிருந்த கேமராமேன் மற்றும் குழுவினரின் பணம் மற்றும் தொலைபேசிகளை கேட்டு மிரட்டி பிடுங்கிகொண்டு ஓடியுள்ளார்.

இவை அனைத்தும் நேரலையாக கேமராவில் பதிவு செய்யப்பட, அந்த வீடியோவை பத்திரிகையாளர் டியாகோ ஓர்டினோலா தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இப்போது கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.


Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :