• TRENDING | பர பர

நாடாளுமன்ற உரைக்குப் பின் பதற்றமான ஜெர்மன் பிரதமர்! என்ன நடந்தது தெரியுமா?





நாடாளுமன்றத்தில், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், முககவசம் அணிய மறந்ததையடுத்து, மாஸ்க்கைத் தேடி ஓடிய காட்சி தற்போது வீடியோவாக வைரலாகி வருகிறது.

கொரோனா என்ற பெருந்தொற்று, உலகின் எந்தவொரு மூலை முடுக்கையும் விட்டுவைக்காமல் பரவி மனித உயிர்களை வேட்டையாடி வரும் வேளையில், அதைக் கட்டுப்படுத்தும் விதமாக முககவசம் அணிவது உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது. WHO அறிவுறுத்தலின்படி, அனைத்து நாடுகளிலும் முக கவசம் அணியும் வழக்கம் நடைமுறைக்கு வந்தன.

இந்நிலையில், ஜெர்மனில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் பேசியபின், தான் முககவசம் அணிய மறந்ததை உணர்ந்த பிரதமர், அதனைத் தேடி, பதறியடித்து ஓடும் காட்சி படம்பிடிக்கப்பட்டுள்ளது.

தான் முககவசம் அணியாமல் உணர்ந்த மறுகணமே, ஏஞ்சலா மெர்க்கல் பதற்றத்துடன், அருகில் இருக்கும் முககவசம் வழங்கும் நபரிடம் இருந்து ஒரு முககவசத்தை பெற்று அணிந்து கொண்டார்.

கொரோனாவின் தாக்கம் ஒருபக்கம் இருந்தாலும், முககவசம் என்பது நம்மோடு ஒன்றிப்போன விஷயமாக மாறிவிட்டதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்காட்டுகிறது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Twitter link : https://twitter.com/Reuters/status/1362908573668315142

Comments

கேஆர்எஸ். சம்பத். says :

பொருப்பானவங்க ரூல கடைபிடிக்கிறாங்க! திருச்சி பக்கம் வந்து பாருங்க.. எவர் சொன்னாலும் முககவசம் அணியாது இருக்கிறார்கள். தவிர, கண்ட இடங்களின் எச்சில் உமிழ்வது சர்வ சாதாரணம். பொது இடங்களில் பீடி சிகரெட் தாராளம். கொரோனா இவர்களைக் கண்டு அஞ்சி வரவில்லையோ?????

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :