• TRENDING | பர பர

நெட் ஸ்பீட் ரொம்ப ஸ்லோ: புகார் செய்ய 10000 டாலர் செலவு செய்த 90 வயது தாத்தா!





கலிபோர்னியாவின் ஒரு பகுதியில் இன்டர்நெட் ஸ்பீட் மிகவும் ஸ்லோவாக இருப்பதால், அதுகுறித்து புகார் செய்வதற்காக, 10000 டாலர் செலவு செய்துள்ள 90 வயது தாத்தாவின் சம்பவம் அனைவரையும் வியப்படையச் செய்துள்ளது.

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில், 90 வயதான ஆரோன் எப்ஸ்டீன் என்பவர் வாழ்ந்து வருகிறார். எப்ஸ்டீன், 80 ஆண்டுகளுக்கும் மேலாக AT& நெட்வொர்க்கைப் பயன்படுத்தி வரும்நிலையில், தற்சமயம் அவருக்கு இன்டர்நெட் வேகம் மிகவும் ஸ்லோவாக இருப்பதை உணர்ந்தார். இதுசம்பந்தமாக, கம்ப்ளைண்ட் செய்தபிறகு, வாடிக்கையாளர் பராமரிப்பு சேவை மூலம் அவர் கேள்விப்படாத தொடர்ச்சியான புகார்கள் வரவே, பின்னர் விளம்பரத்தை வெளியிட முடிவு செய்தார்.

‘மதிப்பிற்குரிய திரு. ஸ்டான்கி: AT&T-யானது, மின்னணு தகவல்தொடர்புகளில் தன்னை ஒரு தலைமையாக பெருமைப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, பொதுமக்கள் வசிக்கின்ற, N. ஹாலிவுட், CA 91607 இல் AT&T-யானது ஒரு பெரிய ஏமாற்றமாக உள்ளது.

தற்போதுள்ள வளர்ச்சியடைந்த தொழில்நுட்பத்தை நாம் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும். மேலும் அதிவேகமுள்ள இணையத்தை எங்களுக்கு AT&T வழங்கும் என எதிர்ப்பார்த்தோம்.

AT&T ஆனது மற்ற சுற்றியுள்ள இடங்களுக்கு 100 MBS வரை விளம்பர வேகத்தைக் கொண்டிருந்தாலும், AT&T-யிலிருந்து எங்களுக்குக் கிடைக்கும் வேகமானது வெறும் 3 MBS ஆகும்.’ என்று எப்ஸ்டீன் தனது விளம்பரத்தில் எழுதினார்.

இந்த விளம்பரமானது, நிறுவனத்தின் முதலீட்டாளர்களை சென்றடைய, வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் நியூயார்க் பதிப்பை எப்ஸ்டீன் தேர்வு செய்தார். இந்நிலையில் AT&T தலைமை நிர்வாக அதிகாரி ஜான் ஸ்டான்கியிடமிருந்து வந்த தொலைபேசியில், தங்களது பகுதியில் இணைய வேகத்தை விரைவில் வேகப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என உறுதியளித்துள்ளார்.

அதேபோல், இந்த விளம்பரத்திற்குப் பின், எப்ஸ்டீன் வசிக்கும் பகுதியில், AT&T-யின் பயன்பாடு, பைபருக்கு மேம்படுத்தப்பட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஸ்ட்ரீமிங் திரைப்படங்கள் மற்றும் ஆன்லைன் நிகழ்ச்சிகள் இவற்றை விரும்பும் எப்ஸ்டீன், அதன் பின் அளித்த பேட்டி ஒன்றில், தனது பகுதியில் உள்ள இணைப்பை வேகப்படுத்தியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.

Comments

கேஆர்எஸ். சம்பத். says :

ஒரு டெலிஃபோன் கம்ப்ளைண்ட் பண்ணி ஒரு வருஷம் ஆகப்போகுதுங்க . யாரும் கவலையே படுவதில்லைங்க. AT&t தாமதமானாலும் பொருப்பா செய்யவேண்டியதை செய்துட்டாங்களே

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :