• SPARKLES | மினுமினு

மலர் போலே மலர்கின்ற மனம் வேண்டும் தாயே!


ரேவதி பாலு

(ஸ்ரீ அன்னையின் பிறந்தநாள் ஞாயிற்றுக் கிழமையன்று (21.02.21) வருகிறது. அதையொட்டி எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரை)

(ஸ்ரீ அன்னை 1878 ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி பிரஞ்சு நாட்டின் பாரிஸ் நகரில் பிறந்தவர் அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் மிர்ரா அல்ஃபசா என்பதாகும்..

எதிர்மறை சிந்தனைகள்தான் நம் முன்னேற்றத்துக்குத் தடை என்கிறார் ஸ்ரீஅன்னை. எதிர்மறை சிந்தனைகளை எப்படித் தடுப்பது?! நம் மனதில் ஒவ்வொரு உணர்ச்சியும் உருவாகி அவை வெளிப்படுவதற்கு முன்பு மனதிற்கு ஒரு காவற்காரரை நியமித்து நல்லதை உள்ளே இருத்தி வேண்டாததை வெளியே தள்ளி விடவேண்டும். எண்ணமும் பேச்சும் எப்பொழுதும் நேர்மறையாகவே இருக்க வேண்டும். முதலில் இந்த பயிற்சி சற்றுக் கடினமாகத்தான் இருக்கும். ஆனால் பழகப் பழக அது நமக்கு இயல்பான ஒன்றாகிவிடும் என்கிறார்.

இதை ஒரு நிகழ்வு மூலம் மிக எளிதாக விளக்குகிறார் ஸ்ரீ அன்னை. இன்றைக்கு காலையில் பால் வரத் தாமதமாகி விட்டது. காலையில் காப்பி நேரத்திற்குக் குடிக்க முடியாமல் போனதில் நமக்குக் கோபம் வருகிறது. பால் பாக்கெட் போடும் பையனை மனதிற்குள்ளாகவே திட்ட ஆரம்பித்து அது வெளியிலும் பிரதிபலிக்கிறது. இந்த எதிர்மறை எண்ணத்தை சட்டென்று ஒரு நேர்மறை வாக்கியத்தை அமைதியான மனதுடன் நமக்குள் சோல்லிக் கொள்வது மூலம் மாற்றிக் கொள்ளலாம் என்கிறார் ஸ்ரீ அன்னை.

‘எனக்கு பால் கிடைக்க வேண்டும்!. பால் போடும் பையன் விரைவில் வர வேண்டும்!‘ என்னும் நேர்மறை சிந்தனைக்கு, எண்ண ஓட்டத்துக்கு உடனே பலன் கிடைக்கும் என்கிறார் ஸ்ரீ அன்னை.

இந்த உணர்ச்சிகள் வெளிப்படுவது எவ்விதம்? மனதில் ஏற்படும் உணர்ச்சிகள் வெளிப்படுவது நம் வாயின் மூலந்தான். ஆமாம்!. நம் பேச்சுதான் நம் மன உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது. பேச்சு என்னும் அற்புதமான சக்தியை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். பேச்சின் அருமை தெரிந்து இதனை பயன்படுத்த வேண்டும். பேச்சு எவ்வளவு குறைவாக இருக்குமோ அவ்வளவுக்கு அதன் சக்தி அதிகமாக இருக்கும். நாம் அதிகமாகப் பேசும்போது நம்மையறியாமல் பேச்சில் பொய்கள் நிறைய வந்துவிடும். அந்த காலத்தில் ரிஷிகள் வாக்கு பலித்ததற்குக் காரணம் அவர்கள் பொய் பேசாதிருந்ததுதான். உண்மை பேசுவதும்கூட தவத்திற்கு ஈடாகும்.

மகான்களின் அவதார தினத்தை (பிறந்தநாளை) ஜயந்தி என்று கொண்டாடி வழிபாடு செவது நம் வழக்கம். இந்த ஆண்டு பாண்டிச்சேரி ஸ்ரீ அன்னையின் பிறந்தநாள் ஞாயிற்றுக் கிழமையன்று (21.02.21) வருகிறது. அன்னை பக்தர்கள் மலர் அஞ்சலி செய்து அந்த நாளை சிறப்பாக வழிபடுவார்கள்.

ஆனால் நம் அனைவருடைய பிறந்தநாளும் கொண்டாடப்பட வேண்டிய ஒரு நாளே என்று ஸ்ரீ அன்னை கூறுவது நாம் அனைவரும் மனதில் இருத்திக் கொள்ள வேண்டிய ஒன்றாக இருகிறது.

பிறந்தநாள் என்றால் நாமெல்லாம் புத்தாடை உடுத்திக் கொள்கிறோம். இனிப்பு உண்கிறோம். மனதில் ஒரு குதூகலமான உணர்வு ஏற்படுகிறது. பெரியவர்களை நமஸ்கரித்து ஆசி பெறுகிறோம். கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவதும் வழக்கம். நமக்குத் தெரிந்தது அவ்வளவு தான்.

ஆனால் ஸ்ரீ அன்னை நம் பிறந்தநாளை மிகச் சிறப்பித்துக் கூறுகிறார். அன்று நம்மையறியாமல் நம் மனதில் ஒரு புத்துணர்வு, குதூகலம் உண்டாகிறதே அதன் காரணத்தை விளக்குகிறார். அதைக் கேட்கும்போது நமக்கு மெசிலிர்க்கிறது. வருடத்தில் சில நாட்கள் இறைவன் ஒவ்வொரு ஆத்மாவுக்குள்ளும் நுழைகிறானாம். நம் பிறந்தநாள் அந்த நாட்களுள் ஒன்றாம். அன்றைய தினம் நம் ஆன்மா இறைவனை சந்திக்கிறது. ஆமாம்! அன்று நாம் இறைவனுடன் நேரடியாகத் தொடர்பு கொள்கிறோம் என்கிறார்

ஸ்ரீ அன்னை. அதனால் தான் ஒவ்வொருவரும் தன் பிறந்தநாளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்கிறார் ஸ்ரீ அன்னை.

அது எப்படி என்கிற கேள்வி எழுகிறது அல்லவா? அன்று நம் மனதில் ஏற்படும் புத்துணர்ச்சி, மகிழ்ச்சி முதலியவையே அதற்குச் சான்று. அந்த நாளில் நாம் நல்ல விழிப்புணர்வுடன் இருந்தால், நம்முள் இறைவனின் சாந்நித்தியத்தை உணர முடியும். இந்த நாள் உண்மையிலேயே வாழ்வில் நல்ல வாய்ப்பைக் கொடுக்கும் நாளாக விளங்குகிறது. பிரபஞ்சத்திலிருந்து கிடைக்கும் அளப்பரிய சக்தியை கிரகிக்கும் அளவுக்கு அன்று அவருக்கு மனம் திறந்த நிலையில் இருக்கிறது.

இறைவனே தன் வாயிற்கதவுகளை நமக்காக அகலத் திறந்துவிடும் நாள் நம் பிறந்தநாள். இது இறைவன் நமக்கு வழங்கும் ஒரு நன்னாள். ஆண்டு தோறும் நம் பிறந்தநாளில் நமக்குத் தெரியாமலேயே ஒரு சூட்சும நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று நம் ஆன்மா உடலை விட்டு வெளியேறி, மேன்மேலும் உயர்ந்து பயணம் செய்து தன் மூலமாகிய இறைவனை அடைகிறது. அங்கு இறைவனிடமிருந்து சக்தி, ஒளி, ஆனந்தம் ஆகியவற்றைப் பெற்றுகொண்டு வருகிறது. அடுத்த ஒரு வருடத்தைக் கழிப்பதற்காக மீண்டும் புத்துயிர் பெற்று கீழிறிங்கி வருகிறது. இவ்வாறே ஒவ்வொரு வருடமும் நடைபெறுகிறது. நாம் விழிப்புணர்வுடன் இருந்து இந்த அருளாசியை நம் பிறந்தநாளன்று பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார் ஸ்ரீ அன்னை.

மலர்களைப் பற்றி தான் எவ்வளவு அருமையான தகவல்களை ஸ்ரீ அன்னை கூறியுள்ளார்? அன்னைக்கு சமர்ப்பிக்கப்படும் ஒவ்வொரு மலரும் தனக்குரிய குணத்தை சமர்ப்பித்தவருக்குப் பெற்றுத் தருமாம். வேப்பம்பூ இனிமையையும், எருக்கம்பூ தடைகளை உடைக்கும் தைரியத்தையும், துளசி பக்தியையும், நாகலிங்கப்பூ வளமையையும், வாடாமல்லி என்றும் அழியாத்தன்மையையும் தரும். ரோஜா மலர்கள் நமக்குப் பெருமையையும் கௌரவத்தையும் பெற்றுத் தரும். நாம் அலட்சியமாக காகிதப்பூ என்று ஒதுக்கும் குரோட்டன்ஸ் மலரை அன்னைக்கு சம்ர்ப்பித்தால் பூரண பாதுகாப்பை நமக்கு அது பெற்றுத் தரும்.

ஸ்ரீ அன்னையின் பிறந்தநாளை விதவிதமான வண்ண வண்ண மலர்களைக் கொண்டு மலர் அஞ்சலி செது கொண்டாடப் போகும் நாம், அன்று நம் பிறந்தநாளைப் பற்றி ஸ்ரீ அன்னை அருளுரைத்த செய்தியையும் மனதில் வாங்கிக் கொண்டு அதையும் சிறப்பாகக் கொண்டாட ஸ்ரீ அன்னையின்அருளாசியை வேண்டிப் பெறுவோம்.

Comments

S.Gowri says :

short story is very nice what Annai saysthat we have tobe positive always Yes on this auspicious day let Her bless us all to have healthy and long life. Be positive Be positive

S.Gowri says :

short story is very nice what Annai saysthat we have tobe positive always Yes on this auspicious day let Her bless us all to have healthy and long life. Be positive Be positive

Meena Rangharajan says :

The above situation/story will definitely change the mindset of pessimistic people towards life and thoughts. It is important to plant a good thought in your head irrespective of the situation and from now on I’m going to take a step towards positivity in each and every situation.

கேஆர்எஸ். சம்பத் says :

அன்னையை வழிபடும் முறையையும், நம் மனத்தை செம்மையாக வைத்துக்கொள்ளவும் வழி காட்டும் இந்த கட்டுரை A-1

Yesudas says :

உள்ளுணர்வு மூலமே நல்லதை காண முடியும், வெரும் சரித்திரம் எதையுமே மாத்தாது! இந்தம்மா ஆத்மஞான தேன் சிந்தும் மலர். சாதாரண ஈ போன்ற மக்களுக்கு தேன் பிடிக்காதே! அதுங்கதானே 128 கோடி இருக்கு! அலைஞ்சு, பறந்து தேன் தேடும் தேனீக்கள் கொஞ்சம்தானே! ஈ யை தேனீயா மாத்த முடியாதே!(பிகு: சுத்த தேனிலே ஈயை புடிச்சு போட்டா, நழுவி ஓடிடும்!)

Yesudas says :

உள்ளுணர்வு மூலமே நல்லதை காண முடியும், வெரும் சரித்திரம் எதையுமே மாத்தாது! இந்தம்மா ஆத்மஞான தேன் சிந்தும் மலர். சாதாரண ஈ போன்ற மக்களுக்கு தேன் பிடிக்காதே! அதுங்கதானே 128 கோடி இருக்கு! அலைஞ்சு, பறந்து தேன் தேடும் தேனீக்கள் கொஞ்சம்தானே! ஈ யை தேனீயா மாத்த முடியாதே!(பிகு: சுத்த தேனிலே ஈயை புடிச்சு போட்டா, நழுவி ஓடிடும்!)

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :