• TRENDING | பர பர

ஓடும் ரயிலின் அடியில் சிக்கி, சாமர்த்தியமாக தப்பித்த பெண்ணின் வைரல் வீடியோ!





ஹரியானாவில், நின்றுகொண்டிருந்த ரயிலைத் தாண்டி மற்றொரு பக்கம் போக நினைத்த பெண், ரயில் புறப்பட்டதால் திக்குமுக்காடிப்போய் அங்கேயே படுத்து புத்திசாலித்தனமாக தப்பித்த காட்சிகள் வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது.

ஹரியானா மாநிலத்தின் ரோஹ்தக் பகுதியில் உள்ள ஒரு சிக்னலில் ரயில் நின்று கொண்டிருந்தது. ரயில் நின்றுகொண்டிருப்பதை பார்த்த ஒரு பெண், அந்த ரயிலின் அடிப்பகுதி வழியே சென்று அந்தப் பக்கம் சென்றுவிடலாம் என எண்ணி ரயிலுக்கு அடியே நுழைந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ரயில் நகர ஆரம்பித்தது.

இதை உணர்ந்த அப்பெண், புத்திசாலித்தனமாக அப்படியே கீழே படுத்துக்கொண்டார். பதைபதைப்புடன் அருகிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்களும் அவரை கீழே படுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தினர்.

பின்னர் ரயில் மெதுவாக அவரைக் கடந்து சென்றதும் அவர் படபடப்புடன் அந்த இடத்தை விட்டு எழுந்து நகர்கிறார். அப்பெண் தண்டவாளத்தில் இருந்து எழுவதற்கு அங்கு நின்று கொண்டிருந்தவர்களும் உதவி புரிந்துள்ளனர்.

இந்த வீடியோ காட்சியானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஒருபுறம் அவர் புத்திசாலித்தனமாக தப்பிப் பிழைத்தாலும், பலரும் அவரது பாதுகாப்பற்ற செயலை விமர்சித்தும் வருகின்றனர்.

Twitter link : https://twitter.com/ANI/status/1362242205201485828

Comments

கேஆர்எஸ். சம்பத் says :

ரயிலுக்கு அடியில் புகுந்து செல்லும் நபர் இவர்தான் முதல் முதலாக இருக்கும். எப்படியெல்லாம் யோசனை தோன்றுகிறது? எப்படியோ .. பிழைத்தாரே ......அதுவரை சந்தோஷம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :