• TRENDING | பர பர

விஜே சித்ரா நடித்த கால்ஸ் திரைப்படம் விரைவில் ரிலீஸ்!


ராகவ்குமார்





நடிகை ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ்’ விஜே சித்ராவின் தற்கொலை சம்பவம் நடந்து பல மாதங்கள் ஆகியும், இப்போதும் தமிழ் நாட்டின் மரணத்தின் மர்மங்கள் பற்றி ரசிகர்கள் பேசி கொண்டிருக்கிறார்கள். செய்தி வாசிப்பாளர், தொலைக்காட்சி நடிகை, என மக்கள் மத்தியில் புகழ் பெற்றிருந்த சித்ரா திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.

சித்ரா நடித்த ‘கால்ஸ்’ என்ற திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது. சபரீஷ் இப்படத்தை இயக்கி உள்ளார். படத்தின் ட்ரைலர் வெளியான சில நாட்களில், இரண்டு மில்லியன் பார்வையாளர்களைச் சென்றடையும் நிலையில் உள்ளது.

ஒரு நடிகை இறந்து சில மாதங்கள் கடந்த பின்பும் அந்நடிகை நடித்த படத்திற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது இதுவே முதல் முறை.

மக்கள் சித்ராவின் மீது வைத்துள்ள அன்பும், ‘கால்ஸ்’ படத்தின் வெற்றியும், சித்ராவின் ஆத்மாவை சாந்தி அடைய செய்யும் என்று நம்புவோம்.

Youtube link : https://www.youtube.com/watch?v=qYR2otRiiss&t=5s

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :