• TRENDING | பர பர

செவ்வாயில் தரையிறங்கியது பெர்சவரன்ஸ் விண்கலம்! வழிநடத்தியவர் இந்தியப் பெண்!





நாசா அனுப்பிய விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி, அது எடுத்த புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ள நிலையில், அந்த குழுவை வழிநடத்தியவர் ஒரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் என்பதும் தெரியவந்துள்ளது.

விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் ஏதேனும் இருந்ததா என்பது குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள பெர்சவரன்ஸ் என்ற ரோவர் விண்கலத்தை அனுப்பி வைத்தது.

பெர்சவரன்ஸ் விண்கலத்தை, கடந்த ஆண்டு ஜூலை 30-ம் தேதி நாசா விஞ்ஞானிகள், செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பினர். செவ்வாயின் மேற்பரப்பில் உள்ள மண், கல் மற்றும் பாறைகள் இவற்றின்மீது ஆய்வுகளை மேற்கொண்டு வந்த விண்கலம், செவ்வாய் கிரகத்தின் வெளிப்பரப்பை, நேற்று நெருங்கியது.

பெரிதும் எதிர்பார்ப்பில் இருந்த விஞ்ஞானிகளுக்கு, பெர்சவரன்ஸ் விண்கலம் அனுப்பிய தகவலின்படி, தற்போது வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி விட்டது என்று தெரியவந்துள்ளது.

மேலும் செவ்வாய் கிரகத்தில் பெர்சவரன்ஸ் விண்கலம் எடுத்த புகைப்படத்தையும் நாசா ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விண்கலத்தின் குழுவை வழிநடத்தியது சுவாதி மோகன் என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் என்பது தெரியவந்துள்ளது.

சுவாதி மோகன், பெர்சவரன்ஸ் விண்கலத்தின் வழிநடத்துக் குழு தலைவராக பணியாற்றியுள்ளார். இவர் சிறு வயதாக இருக்கும்போதே இவரது பெற்றோர் அமெரிக்காவில் குடியேறிவிட்டனர்.

நாசாவின் இரு முக்கிய திட்டங்களில் பணியாற்றியுள்ள இவர், விண்வெளி மற்றும் விமானத்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :