• TRENDING | பர பர

விரைவில் ட்விட்டரில் வரவிருக்கிறது வாய்ஸ் மெசேஜ் வசதி!





உலகளவில் மிகவும் பிரபலமான சமூக வலைதளங்களில் ஒன்று ட்விட்டர். தற்போது, அந்நிறுவனம், இந்த ட்விட்டரில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் சோதனையை இந்தியாவில் தொடங்கியுள்ளது. இது சம்பந்தமான ஒரு ட்வீட்டை, ட்விட்டர் இந்தியா அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளது.

இந்தியா மட்டுமில்லாமல், பிரேசில், ஜப்பான் மாதிரியான நாடுகளிலும், ட்விட்டர் வாய்ஸ் மெசேஜ் வசதியை சோதனையிட்டு வருவதாகவும் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘ட்விட்டர் பயன்பாட்டில், இந்தியா முன்னணி இடத்தை வகிக்கிறது. அதனால் தான் இன்னும் பல புதுப்புது அம்சங்களை வழங்கவே, இந்த சோதனைகளை செய்து வருகிறோம்’ என தெரிவித்துள்ளார் ட்விட்டர் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மணீஷ் மகேஸ்வரி.

இந்த வாய்ஸ் மெசேஜ் எவ்வாறு செயல்படுகிறது, என்பதற்கான ஒரு வீடியோவையும் ட்விட்டர் இந்தியா அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. விரைவில் பயன்பாட்டுக்கு வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Twitter link : https://twitter.com/TwitterIndia/status/1361900922465644544

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :