• TRENDING | பர பர

மகனின் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கப் போகிறாரா?





தளபதி விஜய், தன் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி தீயாய் பரவிவருகிறது. ஆனால் இந்த தகவல் இதுவரை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

தற்போது விஜய்யின் மாஸ்டர் படம் ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், விஜய்யின் ‘தளபதி 65’ படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். அதைத்தொடர்ந்து, ‘தளபதி 66’ படத்தை இயக்குபவரின் பட்டியலில் லோகேஷ் கனகராஜ், அட்லி உட்பட 4 இயக்குநர்களின் பெயர்கள் அடிபட்டு வருகிறது.

இந்நிலையில், தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தன் தந்தை விஜய்யை இயக்கப் போகிறார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. இது உறுதி செய்யப்படாத தகவலாக இருந்தாலும், மகன் சஞ்சய்க்கு தன் அப்பாவை வைத்து படம் பண்ணும் ஐடியா உள்ளதாம்.

ஜேசன் சஞ்சய் இயக்குநர் சம்பந்தமான படிப்பை கனடாவில் படித்து முடித்திருக்கிறார். இந்நிலையில் அவர் இயக்கி நடித்த குறும்படங்களும் இதற்குமுன் வெளியாகி இருந்தன. ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு ஆசை இருக்கும். அதேபோல், ஜேசன் சஞ்சய்க்கும் இயக்குநர் ஆவதில்தான் விருப்பமாம்.

இவரது ஆசை இப்படி இருக்க, அவரைத்தேடி ஹீரோ வாய்ப்புகளும் வந்துகொண்டிருப்பதாகவும் அறியப்படுகிறது.

இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் நெல்சன் திலீப்குமாருக்கு உதவியாளராக ஜேசன் வேலை செய்யக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. என்னதான் அப்பாவை வைத்து இயக்க முயற்சி செய்தாலும், அதற்கு முன் இயக்குநருக்கான போதிய அனுபவம் பெற விரும்புகிறாராம் ஜேசன் சஞ்சய்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :