• TRENDING | பர பர

அடேய் என்னடா நடக்குது இங்க! இது என்ன வீச்சு தோசையா?





தமிழகத்தின் தென் பகுதிகளில் வீச்சு பரோட்டா என்றால் பேமஸ். அதிலும் திருநெல்வேலி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் சால்னாவுடன் வீச்சு பரோட்டா அனைத்து உணவகங்களில் கிடைக்கும். மக்களும் மிகவும் விரும்பி சாப்பிடுவர்.

வீச்சு பரோட்டா பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம்.. வீச்சு தோசை?!

இந்த தோசை தமிழகத்தில் இல்லை. மகாராஷ்டிராவில், சவுத் மும்பையில் உள்ள மங்கல்தாஸ் மார்க்கெட்டில் இப்படியொரு வீச்சு தோசை வலம் வருகிறது. வீச்சு தோசை என்றால் வீச்சு பரோட்டா போல் கிடையாது. பெயருக்கேற்றர்போல், இளைஞர் ஓருவர், சுட சுட மசாலா தோசை சுட்டு, அதை அலேக்காக 4 அடி உயரத்திற்கு அப்படி தூக்கி வீசுகிறார். அதை அருகில் இருக்கும் ஒரு நபர் லாவகமாக பிளேட்டில் பிடிக்கிறார்.

இது எப்போதோ ஒருமுறை நடக்கிற விஷயம் அல்ல. எப்போதும் இப்படித்தான் செய்கிறார். தற்போது இளைஞரின் இந்த செயல் இணையத்தில் வீடியோவாகப் பரவி, நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இருந்தாலும் ஒரு சிலர், சாப்பிடும் உணவை இப்படி தூக்கி வீசுவது, அதற்கான மரியாதையா எனவும் கேள்விகளை எழுப்பியுள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Youtube video link : https://www.youtube.com/watch?v=hRdX2bwUFUU

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :