• TRENDING | பர பர

தி கிரே மேன் படத்தில் தனுஷ் கதாபாத்திரம் இதுதான்- ரகசியங்களை வெளியிட்ட எழுத்தாளர்..!





`தி கிரே மேன்` படத்தின் கதையை எழுதியுள்ள மார்க் கிரேனி படத்தில் தனுஷ் நடித்து வரும் கதாபாத்திரம் குறித்த விபரங்களை நிகழ்ச்சியொன்றில் தெரிவித்துள்ளார்.

மார்க் கிரேனி என்பவர் எழுதிய `தி கிரே மேன்` என்கிற நாவல் அதே பெயரில், ஹாலிவுட் படமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தை ஆந்தோனி ரூஸோ மற்றும் ஜோயி ரூஸோ சகோதரர்கள் இயக்கி வருகின்றனர். இதில் ஹாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களான ரயான் காஸ்லிங், கிறிஸ் ஈவென்ஸ் உடன் நடிகர் தனுஷ் இணைந்து நடித்து வருகிறார்.

சமீபத்தில் உரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எழுத்தாளர் மார்க் கிரேனி, தி கிரே மேன் படத்தில் தனுஷ் நடித்து வரும் கதாபாத்திரம் குறித்த விபரங்களை தெரிவித்துள்ளார், இது முழுக்க முழுக்க ஆதிரடி த்ரில்லர் படமாகும். பணத்திற்காக கொலை செய்யும் கோர்ட் ஜென்ட்ரி என்ற கதாபாத்திரத்தில் ரயான் காஸ்லிங் நடிக்கிறார். அவரை தீர்த்துகட்ட நினைக்கும் கூட்டத்தின் தலைவனாக தனுஷ் நடிக்கிறார் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், இந்தியாவை சேர்ந்த ஒருவர் அமெரிக்க படத்தில் நடிப்பது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அவரை குறித்து எனக்கு எதுவும் தெரியாமல் இருந்தது. ஆனால் ட்விட்டரில் எனக்கு வெறும் 6000 ஃபாலோயர்ஸ்கள் தான் உள்ளனர். ஆனால் அவருக்கோ 9.7 மில்லியன் ஃபாலோயர்ஸுகள் இருக்கின்றனர். அதை தொடர்ந்து இந்தியாவில் தனுஷ் எவ்வளவு பெரிய நடிகர் என்பதையும் தெரிந்துகொண்டே என எழுத்தாளர் மார்க் கிரேனி நிகழ்ச்சியில் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் அமெரிக்க புறப்பட்டுச் சென்ற தனுஷ் `தி கிரே மேன்` படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரயால் காஸ்லிங், கிறிஸ் ஈவென்ஸ் ஆகியோருடன் வாக்னர் மவுரா, ஜூலியா பட்டர்ஸ் மற்றும் ஜெஸிகா ஹென்விக் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளம் தயாரித்து வருகிறது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :