• TRENDING | பர பர

இயக்குநராகும் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா!





கோலிவுட்டில் பிரபல முன்னணி ஸ்டண்ட் மாஸ்டராக வலம்வருபவர் ஸ்டண்ட் சில்வா. இவர் இப்போது ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர், தமிழ்த்திரையுலகில், விஜய், அஜித் உட்பல பல பிரபலமான நடிகர்களின் படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி பிரபலமானவர். அதிலும் அஜித் நடிப்பில் வெளியான ‘வீரம்’, ‘விஸ்வாசம்’, ‘விவேகம்’, ‘என்னை அறிந்தால்’ போன்ற படங்களில் வரும் சண்டைக் காட்சிகள் ரசிகர்களை பெரிதும் கவரும் ஸ்டண்ட் சில்வாதான் அமைத்திருப்பார்.

அதேபோல் சில படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். தளபதி விஜய்யுடன் பைரவா, ஜில்லா, மாஸ்டர் உட்பட பல பிரமாண்ட படங்களில் பணியாற்றி உள்ளார்.

இந்நிலையில், ஸ்டண்ட் மாஸ்டராக வலம்வரும் சில்வா, விரைவில் இயக்குனராக வரவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

‘மதராசப்பட்டினம்’, ‘தெய்வத் திருமகள்’, ‘தலைவா’ உட்பட பல வெற்றிப் படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் ஏ.எல். விஜய்தான், சில்வா இயக்கவிருக்கும் படத்துக்கு கதை, திரைக்கதை அமைக்க உள்ளாராம். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :