• TRENDING | பர பர

10 ஆண்டுகளாக, பிரதமர் இல்லத்தில் வேலை செய்யும் பூனை!





சுமார் 10 ஆண்டுகளாக இங்கிலாந்து பிரதமரின் அரசு வீட்டில் பூனை ஒன்று சேவை செய்து அனைவரையும் கவர்ந்து வருகிறது.

இங்கிலாந்து பிரதமருக்கான அரசு இல்லம் லண்டனில் உள்ள 10 டவுனிங் வீதியில் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன்னர், எலி தொல்லை இந்த வீட்டில் அதிகமாக இருந்துள்ளது. இதைத் தாங்க முடியாத அப்போதைய பிரதமர் டேவிட் கேமரூன், 2011ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதியன்று, நாய்கள் மற்றும் பூனைகள் வளர்ப்பு இல்லத்தில் இருந்து ஒரு பூனையை தத்தெடுத்தார்.

அந்த பூனைக்கு லாரி என்று பெயர் வைக்கப்பட்டது. பின்னர் பிரதமர் இல்லத்தில் அமர்த்தப்பட்ட அந்த பூனையானது எலிகளை தீவிரமாக வேட்டையாடி, எலித் தொல்லையை நீக்கியது.

இந்நிலையில், லாரி பூனையானது, பிரதமரின் வீட்டுக்கு வந்து 10 ஆண்டுகள் முடிந்துள்ளது. டேவிட் கேமரூன், தெரசா மே அவரைத் தொடர்ந்து போரிஸ் ஜான்சன் காலத்திலும் அந்த பூனை தனது பணியை செம்மையாக செய்து வருகிறது.

‘இதுவரை மூன்று பிரதமர்களுக்கு விசுவாசமாக இருக்கும் லாரி, தான் நம்பமுடியாத அளவுக்கு ஆச்சரியமான பூனை என்பதை பல மில்லியன் மக்களுக்கும் நிரூபித்துள்ளது. உலகின் பெரும் தலைவர்களை எல்லாம் சந்தித்துள்ள லாரி பூனை, ஆண்களுடன் சீக்கிரமாக நட்பு வைத்துக்கொள்வதில்லை. ஆனால், அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுடன் நெருக்கமாக பழகியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது’ என்று ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

லாரி பூனைக்கு தனியாக ட்விட்டர் அக்கவுண்டும் உள்ளது. இதில் கிட்டத்தட்ட 4 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோவர்கள் லாரியை பின்தொடர்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Twitter link : https://twitter.com/Number10cat/status/1361338971549298693/video/1




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :