• TRENDING | பர பர

போட்டிக்கு நடுவே, மைதானத்தில் பென் ஸ்டோக்ஸ் செய்த செயல்: வைரலாகும் வீடியோ!





சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், இங்கிலாந்து அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் தலைகீழாக நடந்துசென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. தற்போது முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்து, 2வது டெஸட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்துவருகிறது.

இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 329 ரன்கள் எடுத்தநிலையில், அதனை தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 134 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.

அடுத்து, இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 286 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. 482 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற முனைப்புடன் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கியது.

இந்நிலையில், மூன்றாம் நாளாக நேற்று, இங்கிலாந்து அணி தனது இன்னிங்ஸை ஆடி வந்த நிலையில், மைதானத்தில் விளையாட்டைக் காணவந்த ரசிகர்களைக் கவரும் விதமாக, இங்கிலாந்து அணி வீரர் ஸ்டோக்ஸ் மைதானத்தில் தலைகீழாக சிறிது தூரம் நடந்து அனைவரையும் ரசிக்க வைத்தார்.

பென் ஸ்டோக்ஸ்ஸின் இந்த செயல், அனைத்து ரசிகர்களையும் கவர்ந்திழுத்ததோடு, அவருக்கு மிகப்பெரிய கைதட்டல்களையும் வழங்கி உற்சாகப்படுத்தினர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :