• TRENDING | பர பர

பால் வியாபாரத்திற்காக விவசாயி வாங்கிய ஹெலிகாப்டர்! ஆச்சரியத்தில் பொதுமக்கள்!





பால் விற்பனையை துரிதப்படுத்துவதற்காக மகாராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் ஹெலிகாப்டர் வாங்கிய சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் பிவாண்டி பகுதியில் வசித்து வருபவர் ஜனார்த்தனன் போரி. இவர் சொந்தமாக கறவை மாடுகளை வைத்து பால் வர்த்தகம் செய்து வருகிறார். இந்நிலையில்தான், பால் விற்பனையை மேம்படுத்த ரூ. 30 கோடி செலவில் ஹெலிகாப்டர் வாங்கி, அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

இதுசம்பந்தமாக ஜனார்த்தனன் கூறுகையில், ‘பால் வியாபாரம் தொடர்பாக, ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் அடிக்கடி செல்ல வேண்டியுள்ளதால், சரியான நேரத்திற்கு செல்லமுடியாத சூழ்நிலை உருவானது. அதை சரிசெய்யவே, ஹெலிகாப்டர் வாங்கியுள்ளேன்’ என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்காகவே தனது வீட்டின் அருகே, ஒரு ஹெலிபேட், பைலட் அறை போன்றவற்றையும் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். தற்போது அந்த ஏரியாவில் இவர் பேசுபொருளாக மாறியுள்ளார்.

ஜனார்த்தனர், பால் விற்பனை மட்டுமல்லாமல், விவசாயமும் செய்து வருவதோடு, பல சேமிப்பு கிடங்குகளையும் (Warehouse) வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :